மேலோர் இயல்பு

உரம்பெற்ற முத்து மாலையை யணிந்த மார்பை உடையவனே! குற்றமற ஒழுக்கத்தைக் காவாத தாழ்ந்த குடியிற் பிறந்தவர்கள்
மேலோர் இயல்பு

பழமொழி நானூறு
 காழார மார்ப! கசடறக் கைகாவாக்
 கீழாயோர் செய்த பிழைப்பினை மேலாயோர்
 உள்ளத்துக் கொண்டுநேர்ந்(து)ஊக்கல் குறுநரிக்கு
 நல்லநா ராயங் கொளல். (பா-80)
 உரம்பெற்ற முத்து மாலையை யணிந்த மார்பை உடையவனே! குற்றமற ஒழுக்கத்தைக் காவாத தாழ்ந்த குடியிற் பிறந்தவர்கள் இயல்பாகச் செய்த தீங்கினை உயர்ந்த குடியிற் பிறந்தவர்கள் மனத்துட்கொண்டு எதிர்த்துத் தீங்கு செய்ய முயலுதல், சிறிய நரியைக் கொல்லும் பொருட்டுக் கூரிய நாராயணம் என்னும் அம்பினை யெய்யக் கொள்வதோடொக்கும். (க-து.) கீழோர் தவறு செய்தால் மேலோர் அதற்கு எதிராகத் தீங்கு செய்ய முயலார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com