சுடச்சுட

  
  lotus

  பழமொழி நானூறு
   சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும்
   பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் - கடைக்கால்
   செயிரறு செங்கோல் செலீஇயினான் இல்லை
   உயிருடையார் எய்தா வினை. (பா-105)
   பகைவர் மூட்டிய தீயால் கொளுத்தப்பட்டு அதனின்றும் உயிர் பிழைத்துச் சென்ற பராந்தக சோழனின் மகனாகிய காரிகாற்சோழனும், இரும்பிடர்த் தலையார் என்னும் பெயரையுடைய தன் மாமனைத் துணையாகப் பெற்று, பிற்காலத்தில், குற்றமற்ற செங்கோலைச் செலுத்தினான்; (ஆதலால்), உயிருடையார் அடைய முடியாததொரு நல்வினைப் பயன் இல்லை. (க-து.) தீமையே அடைவார், என்றாயினும் நன்மையையும் அடைவர்.
   "உயிருடையார் எய்தா வினை இல்லை' என்பது பழமொழி
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai