சான்றோர் கடமை

அகன்ற அலைகள் பாரில் வீசும் கடற்றுறைவனே! தம்மால் அன்பு செய்யப்படுபவர்கள் சிறந்த குணங்கள் உடையரல்லரேனும்,
 சான்றோர் கடமை

பழமொழி நானூறு

 பரியப் படுபவர் பண்பிலா ரேனும்
 திரியப் பெறுபவோ சான்றோர் - விரிதிரைப்
 பாரெறியும் முந்நீர்த் துறைவ! கடனன்றோ
 ஊர்அறிய நட்டார்க்(கு) உணா. (பா-101)
 அகன்ற அலைகள் பாரில் வீசும் கடற்றுறைவனே! தம்மால் அன்பு செய்யப்படுபவர்கள் சிறந்த குணங்கள் உடையரல்லரேனும், அறிவுடையோர் நன்மை செய்தலினின்றும் திரிவார்களோ (இல்லை). ஆதலால், ஊரிலுள்ளோர் அறியத் தம்மோடு நட்புப் பூண்டவர்களுக்கு உணவு கொடுத்தல் கடமையல்லவா? (க-து.) நட்டார் குணமிலாராயினும் சான்றோர்அவர்க்கு நன்மையே செய்வர். "கடனன்றோ ஊரறிய நட்டார்க்குஉணா' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com