தமிழ்ச்சொற் கட்டமைப்பு!

உலகிலேயே தமிழ்ச் சொற்கள் போலக் கட்டமைப்புடைய சொற்களைக் கொண்ட மொழிகள் வேறு இல்லை. அவற்றில் சிறுபான்மையாகக் காணப்படும். ஒவ்வொரு சொல்லும் ஒரு கட்டமைப்புடையதாக இலங்குவது தமிழ் ஒன்றே.
தமிழ்ச்சொற் கட்டமைப்பு!


உலகிலேயே தமிழ்ச் சொற்கள் போலக் கட்டமைப்புடைய சொற்களைக் கொண்ட மொழிகள் வேறு இல்லை. அவற்றில் சிறுபான்மையாகக் காணப்படும். ஒவ்வொரு சொல்லும் ஒரு கட்டமைப்புடையதாக இலங்குவது தமிழ் ஒன்றே. தமிழ்ச் சொற்களை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை,  விகாரம் முதலிய உறுப்புக்களாகப் பிரித்து விடலாம். அவ்வாறு பிரித்த உறுப்பு ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பொருளுண்டு. பிறகு அவற்றைப் பிரித்தபடியே சேர்த்துவிடலாம். ஒரு "பொறி' அல்லது "இயந்திரத்தை'ப் பிரிப்பதும், பிரித்தபடியே சேர்ப்பதும் போன்ற இக்கட்டமைப்பு, தமிழின் தனிச்சிறப்பாகும்.
தமிழிலக்கியம் யாவும் தேர்ந்தெடுத்த தொகுப்புக்களாக இருப்பதால், அவை ஒவ்வொன்றும் ஒரு கட்டுக்கோப்புக்கு உட்பட்டிருக்கும்.

(தமிழண்ணலின் "தொல்காப் பியத் தோற்றம்' நூலிலிருந்து...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com