Enable Javscript for better performance
ஒரே இடத்தில் நீண்ட நாள் தங்க வேண்டாம்- Dinamani

சுடச்சுட

    

     ஒரே இடத்தில் நீண்ட நாள் தங்க வேண்டாம்

    By  முன்றுறையரையனார்  |   Published on : 10th November 2019 05:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    LOTUS

    பழமொழி நானூறு
     கருவினுட் கொண்டு கலந்தாரும் தம்முள்
     ஒருவழி நீடும் உறைதலோ துன்பம்
     பொருகடல் தண்சேர்ப்ப! பூந்தா மரைமேல்
     திருவொடும் இன்னாது துச்சு. (பாடல்-123)
     கரையொடு மாறு கொள்ளும் கடலையுடைய குளிர்ந்த நெய்தல் நாட! அழகிய தாமரையிடத்து வாழும் இலக்குமியேயாயினும் நெடுநாள் உடனுறைதல் துன்பந் தருவதாம். (அதுபோல), கருவினுள் தங்கியபொழுதே தொடங்கிக் கலந்தவர்களும், தமக்குள்ளே ஓர் இடத்தில் நீண்டநாளும் ஒருங்கே தங்கியிருந்து வாழுதல் துன்பம் தருவதாம். (க-து.) உடன்பிறந்தாராயினும் ஒரே இடத்தில் நீண்டநாள் தங்கியிருத்தல் ஆகாது. "திருவொடும் இன்னாது துச்சு' என்பது பழமொழி.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai