Enable Javscript for better performance
பேராசை கொண்டோர்க்கு பெரும்பொறுப்பு தரவேண்டாம்- Dinamani

சுடச்சுட

    

    பேராசை கொண்டோர்க்கு பெரும்பொறுப்பு தரவேண்டாம்  

    By  முன்றுறையரையனார்  |   Published on : 06th October 2019 04:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    lotus

    பழமொழி நானூறு
     கட்டுடைத் தாகக் கருமஞ் செயவைப்பின்
     பட்டுண்டாங் கோடும் பரியாரை வையற்க
     தொட்டாரை ஒட்டாப் பொருளில்லை; இல்லையே
     அட்டாரை ஒட்டாக் கலம். (பாடல்-118)
     கையால் தொட்டவர்களை ஒட்டாத பொருள்கள் இல்லை. சமைத்தாரைப் பொருந்திப் பயன்படாத உணவுப் பொருளுமில்லை. (ஆதலால்), பாதுகாவலுடையதாகுமாறு செயலைச் செய்ய ஒருவனை நிறுத்த நினைப்பின், அச்செயலின்கண் பொருந்தி அதனிடத்துள்ள பயன் அனைத்தையும் கைக்கொண்டு உடனே விட்டு நீங்குகின்ற காரியத்தைச் செய்ய வையாதொழிக.
     "தொட்டாரை ஒட்டாப் பொருளில்லை இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம்' என்பது பழமொழி.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai