படிக்க வேண்டிய பாமருவு நூல்!

நம்மாழ்வார் திருவவதாரம் செய்ததால், "தென் குருகை' என்றும், "ஆழ்வார் திருநகரி' என்றும் போற்றப்பெறும் அவ்வூருக்கும், விசாக நட்சத்திரத்தில் அவ்வாழ்வார் அவதரித்ததால் அந்நட்சத்திரத்திற்கும்  பெருமையும்
படிக்க வேண்டிய பாமருவு நூல்!

நம்மாழ்வார் திருவவதாரம் செய்ததால், "தென் குருகை' என்றும், "ஆழ்வார் திருநகரி' என்றும் போற்றப்பெறும் அவ்வூருக்கும், விசாக நட்சத்திரத்தில் அவ்வாழ்வார் அவதரித்ததால் அந்நட்சத்திரத்திற்கும்  பெருமையும் வந்தடைந்தன. நம்மாழ்வாரின் மீது எத்தனையோ கவிஞர் பெருமக்கள் பிள்ளைத்தமிழ் இயற்றி, அவருக்குப் பெருமை சேர்த்துள்ளனர். 

அந்த வகையில், 1932-ஆம் ஆண்டில் இப்பெருமான் மீது "பிள்ளைத்தமிழ்' பாடினார் கவிஞர் ஒருவர். எந்த ஆண்டில் பாடப்பட்டதோ... 1932-ஆம் ஆண்டுவரை வெளிவராமலேயே இருந்தது. பாடல்களும் முழுமையாகக் கிடைக்காமல், பாயிரமும் சேர்த்து அறுபத்தி ஐந்து (65) பாடல்களே கிடைத்தன.

அவற்றைப் படித்துப் பயின்ற ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த பெரியன் வெ.நா. ஸ்ரீநிவாஸன் என்பவர் பாடல்களின் வனப்பால் கவரப்பட்டார். அதிலுள்ள கவிநயம் கண்டு கிடைத்துள்ள பாடல்களாவது தமிழுலகத்துக்குச் சென்றுசேர வேண்டும் என்னும் நோக்கில் பாயிரம், காப்புப் பருவம் முதல் அம்புலிப் பருவம் வரை கிடைத்த அறுபத்தி ஐந்து பாடல்களையும் திருநெல்வேலியிலிருந்து அக்காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த "வைணவன்' என்னும் மாதப் பத்திரிகையில் வெளியிட்டு மகிழ்ந்தார்.

நூலின் முடிவுரையில், "சடகோபன் அருளால் சுவடியில் கிடைத்த பாகரங்கள் அறுபத்தி ஐந்தையும் வெளிப்படுத்தியிருப்பதாகவும்;  பாக்கியும் அவனருளால் கிடைத்து வெளிவரத் திருவருள் துணை நிற்குமாக' என்று வேண்டியும் எழுதியுள்ளார்.

நூலின் பொருள் நயமும், சொல்லணியும், சந்தப்பொலியும் புனையப்பெற்ற இந்த நூல் செவிச்செல்வம் நுகரும் பெருமக்களுக்குக் கிடைத்தற்கரிய வரப்பிரசாதம். இந்நூலிலுள்ள பாடல்களின் பெருமைக்கு முத்தப் பருவத்தில் வரும் கீழ்க்காணும் பாடலே சான்று.

ஒளிரு முணர்வு முயிரு முடலு மொருவு மறிவும் பெற்று மேல்
    உவையு மிவையு மவையு முளது முலது மற்று நூல்
தெளியு மொளியு மிருளு மனைய தெருளு மருளு மற்றதோர்
    தெரிய வரிய பரமவுருவு சிவனு மயனு மற்றுமாய்
வெளியினளவில் விமல கமல முகுளம் விரிய மொட்டுறா
    விபுல வடிசை முடிவில் சுடரின் விளைவை யளவிமுத்திகூ
ரளியில் மருவு குருகை யெமர்களரசு தருக முத்தமே 
    அனக னதுல னமல னியம வறிவினருள்க முத்தமே. (பா.1)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com