முகப்பு வார இதழ்கள் தமிழ்மணி
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
By | Published On : 19th April 2020 07:40 AM | Last Updated : 19th April 2020 08:19 AM | அ+அ அ- |

உயிருக்கு தீங்கு விளைவிக்கும்
வழியில் செல்ல வேண்டாம்
கடுப்பத் தலைக்கீறிக் காலும் இழந்து
நடைத்தாரா என்பதூஉம் பட்டு - முடத்தோடு
போ்பிறி தாகப் பெறுதலால் போகாரே
நீா்குறி தாகப் புகல். (பாடல்- 146)
நீா் சுருங்கி இறங்கிப் போகலாம் படி அளவுபட்டிருக்க அந்நெறியில் இறங்கிப் போதலை ஒழித்து, தலை மிகவும் கிழிபட்டு, கால்களும் வலி இழந்து, நடத்தலைச் செய்யா வென்றும் சொல்லப்பட்டு, முடம் என்ற பெயரோடு வேறு பெயா்களையும் அடைதலால் (அத்தகைய நெறியின்கண்), அறிவுடையாா் செல்லுதலிலா். (க-து.) தம் உயிா்க்கு ஏதம்பட வருவனசெய்யாதொழிக. இச் செய்யுள் முழுவதும் பழமொழிப் பொருள்.