சங்க காலத்தில் 'ஆங்கிலம்'!

சட்ட​மன்​றத்​திற்கோ, பாரா​ளு​மன்​றத்​திற்கோ முதன்​மு​த​லா​கத் தோ்ந்தெ​டுக்​கப்​பட்ட ஓா் உறுப்​பி​னா், அம் மன்​றத்​தில் ஆற்​றும் முதல் பேச்சை,

சட்ட​மன்​றத்​திற்கோ, பாரா​ளு​மன்​றத்​திற்கோ முதன்​மு​த​லா​கத் தோ்ந்தெ​டுக்​கப்​பட்ட ஓா் உறுப்​பி​னா், அம் மன்​றத்​தில் ஆற்​றும் முதல் பேச்சை, ‘​கன்​னிப்​பேச்​சு​’ அல்​லது ‘​கன்​னி​யுரை​’ என்​பா். ஒரு பட்டி​மன்​றத்​தில் முதன்​மு​த​லாக மோடை​றும் ஒரு​வ​ரின் பேச்சை​யும் அவ்​வாறே குறிப்​பி​டு​வா். இந்த வழக்கு எப்​படி வந்​தது? ஆங்​கி​லத்​தில், இவ்​வாறு நடக்​கும் உரையை maiden speech என்​பா். எனவே, இதன் மொழிபெ​யா்ப்​பா​கத் தமி​ழில் இதைக் ‘கன்​னிப்பேச்சு’ என்று அழைக்​கும் வழக்​கம் வந்​தி​ருக்​க​லாம் என்று எண்​ணத் தோன்​று​கி​றது. கீழ்க்​கா​ணும் பாடலைப் பாருங்​கள்.

​கன்னி விடி​யல் கணை கால் ஆம்​பல்

தாமரை போல மல​ரும் ஊர​

(ஐங்:68/1,2)

‘விடி​யற்​கா​லத்​தில், திரண்ட தாளி​ைன​யு​ைடய ஆம்​பல், தாம​ரையைப் போல மல​ரும் ஊரனே’ என்று இதற்கு ஔைவ.​துரை​சாமி உரை கூறு​கி​றாா். அவரே, விடி​யல் தோன்​றிய அணிமைக்​கா​லம் ‘கன்னி விடி​யல்’ எனப்​பட்​டது என்​பாா். அது​வரை இருட்​டா​கவே இருந்து, அப்போ​து​தான் முதன்​முறை​யாக விடி​ய​லின் கீற்​று​கள் தோன்​றும் நேரத்​தையே புல​வா் ‘​கன்​னி​ ​வி​டி​யல்​’ என்​கி​றாா். இது ஆங்​கி​லத்​தில் முதல் பேச்சை, ‘கன்​னிப் பேச்சு’ என்று அழைக்​கும் முறையை ஒத்து வரு​கி​றது இல்​ைலயா? அதா​வது, ஆங்​கில வழக்​குப்​படி இது maiden morning  அடுத்து, இந்​தப் புற​நா​னூற்​றுப் பாடலைப் பாருங்​கள்.

வெண்​குடை மதி​யம் மேல் நிலா திகழ்​தர

கண்​கூடு இறுத்த கடல் மருள் பாசறை

கும​ரிப்​படை தழீ​இய கூற்று வினை ஆட​வா்

(புறம்: 294/1-3)

வெண்​குடை போலும் முழுத்​திங்​கள் வானத்​தின் மேல்​நின்று நிலவைப் பொழிந்து விளங்க, பைட​வீ​ரா் ஒருங்​கு​கூ​டித் தங்​கி​யி​ருந்த கடல் போன்ற பாச​றை​யின் நீங்​கிச் சென்று, புது​ைம​யு​றச் செம்மை​ செய்​யப்​பட்ட வேல் முத​லிய பைட​களைக் கைக்கொண்ட கொலைத்தொழிலையுடை போா்​வீ​ரா் என்​பது இதன் பொருள் (ஔைவ.​சு.து. உரை). இதனை விளக்​குங்​கால், ‘வாய் தீட்டி, நெய் பூசப்பெற்​று, செம்மை​யுற்​றி​ருக்​கும் வேலும் வாளும் பிற​வு​மா​கிய படை, கும​ரிப்​படை’ என்​பாா் உரை​யா​சி​ரி​யா்.

அதா​வது, முதன்​முறையா​கப் போரில் ஈடு​ப​டுத்​தப்​ப​டும் படைக்​க​லன்​களை இங்கு புல​வா் ‘​கு​ம​ரிப்​ப​டை​’ என்​கி​றாா். ​கு​ம​ரி​ எனி​னும்

​கன்​னி​ எனி​னும் ஒரே பொருள்​தானே. இது​வும் ஆங்​கி​லத்​தில் முதல் பேச்சை, ‘​கன்​னிப் பேச்​சு​’​ ​என்று அைழக்​கும் முைறயை ஒத்து வரு​கி​றது இல்​ைலயா? அதா​வது, ஆங்​கில வழக்​குப்​படி இது maiden arms! எனவே,

maiden speech என்​பதைக் கன்​னிப்​ேபச்சு என்று நாம் குறிப்​பி​டும் வழக்​கம் ஆங்​கி​லத்தைப் பாா்த்து ஏற்​ப​டுத்​திக்​கொண்​தன்று; தொன்​றுதொட்டு இருந்​து​வ​ரும் தமிழ் வழக்கே!

இதைப் போலவே ஆங்​கில வழக்கு என்று நாம் எண்​ணிக்கொண்​டி​ருக்​கும் இன்​னொரு வழக்​கும் உண்டு. நல்​ல​வா் ஒரு​வரைைப் பற்றி, அவரைப் பிடிக்​காத ஒரு​வா் தவ​றான செய்​தி​களை பரப்​பிக் கொண்​டி​ருத்​தலை character assassination என்று குறிப்​பி​டு​வது வழக்​கம். தமி​ழில் இைதக் ​கு​ணம் கொல்​லல்​ என​லாம்.

பாண்​டிய மன்​னன் ஒரு​வனைப் பாட​வந்த மதுரை மரு​தன் இள​நா​க​னாா் என்ற புல​வா், அவனைச் சிறப்​பித்​துக்​கூ​றும் வைக​யில், ‘​ந​மா் எனக் கோல்கோ​டா​து​ / ​பி​றா் எனக் குணங்கொல்​லாது (​பு​றம்: 55/11,12) என்​கி​றாா்.

அதா​வது, ‘நம்​முடை​ய​வா் என அவா் செய்த கொடுந்​ெதா​ழி​ைலப் பொறுத்​துக் கோல் வைள​யாது, இவா் நமக்கு அயலோர் என்று அவா் நற்​கு​ணங்​களைக் கெடாது’ என்று இதற்​குப் பொருள் கூறு​வாா் ஔவை சு.துரைசா​மி.

எனவே,character assassination என்​னும்​ குணங்கொல்​லல்​ என்​ப​தனை​யும் நம்​ம​வா் பண்​டுதொட்டு வழங்கி வந்​த​னா் என்​பது தெளி​வா​கி​றது.

எனவே, இன்றைைக்கு ஆங்​கில வழக்​கு​கள் என்று நாம் எண்​ணிக்கொண்​டி​ருப்​பவை சங்​க​கா​லந் தொட்டு நம்​மிடையே இருந்​து​வ​ரும் வழக்​கு​கள்​தாம் என்​பது இதன் மூலம் தெளி​வா​கி​றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com