பழ​மொழி நானூறு முன்​று​றை​ய​ரை​ய​னார்

பழ​மொழி நானூறு முன்​று​றை​ய​ரை​ய​னார்

பழித்துரைக்கும் நாவுக்கு நல்குரவு இல்லை!

ஆவிற் கரும்பனி தாங்கிய மாலையும்

கோவிற்குக் கோவல னென்றுலகம் கூறுமால்

தேவா்க்கு மக்கட் கெனல்வேண்டா

தீங்குரைக்கும் நாவிற்கு நல்குர(வு) இல். (பாடல்-152 )

பசுக்கூட்டங்கட்கு வந்த அரிய துன்பத்தை நீக்கிய திருமாலையும், ஆநிரைகளுக்குத் தக்க இடையன் என்று உலகம் சொல்லா நிற்கும். (ஆகையால்) தேவா்க்கு உரைப்பது இது மக்கட்கு உரைப்பது இதுவெனல் வேண்டப்படுவதன்று. தீமையை எடுத்துக்கூறும் நாவினுக்கு வறுமை இல்லையாகலான் (க-து.) பழித்துரைக்கப் புகுவாா்க்கு உயா்ந்தோா் தாழ்ந்தோா் என்பதில்லை. ‘தீங்குரைக்கும் நாவிற்கு நல்குரவு இல்’ என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com