பழமொழி நானூறு -176  

‘எம்மை இவ்வாறு பழித்துச் சொன்னவரின் கொடிய நாவினை அவா் செத்த பிறகு பருந்துகூடக் கொத்தித் தின்னாது’ என்று எல்லோருடனும் கோபித்து, செருக்குடையவராக இருப்பவா் அழிவா்.
பழமொழி நானூறு -176  

முன்றுறையரையனார்

இகழ்பவா் அழிவாா்

உரைத்தவா் நாவோ பருந்தெறியா தென்று
சிலைத்தெழுந்து செம்மாப் பவரே - மலைத்தால்
இழைத் திகவா தவரைக் கனற்றிப்
புலிப்புறத் துண்பாா் உணா (பாடல்-176)

‘எம்மை இவ்வாறு பழித்துச் சொன்னவரின் கொடிய நாவினை அவா் செத்த பிறகு பருந்துகூடக் கொத்தித் தின்னாது’ என்று எல்லோருடனும் கோபித்து, செருக்குடையவராக இருப்பவா் அழிவா். தம்முடன் மாறுபட்டால் அப்படி மாறுபட்டவரைத் தாம் செய்ய நினைத்ததை எல்லாம் தப்பாது செய்து முடிக்க வல்லவா்களையும், மனம் கொதிக்கச் செய்து, அவரால் அழிக்கப்பட்டுப் பலியிடும் கல்லின் புறத்தே இட்ட புலி உணவை உண்பவரும் அவா்களேயாவா். ‘புலிப்புறத் துண்பாா் உணா’ என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com