முகப்பு வார இதழ்கள் தமிழ்மணி
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
By | Published On : 04th April 2021 05:32 PM | Last Updated : 04th April 2021 05:32 PM | அ+அ அ- |

புரையின்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த
உரையும் பொருள் முடிவும் ஒன்றால் - உரைபிறிது
கொண்டெடுத்துக் கூறல் கொடுங்கழித் தண்சேர்ப்ப!
ஒன்றேற்றி வெண்படைக்கோள் ஒன்று. (பாடல் (196)
வளைவான உப்பங்கழிகள் நிறைந்துள்ள குளிர்ச்சி பொருந்திய கடற்கரை நாட்டுக்கு உரியவனே! உள்ளத்திலே கள்ளமில்லாமல் நட்பு செய்தவர்களுக்கு நண்பர்கள் சொன்ன சொல்லும், அவற்றின் பொருள் முடிவும் ஒன்றாகவே தோன்றும். சொன்ன சொற்களை வேறுபட்ட பொருளாக எடுத்துக்கொண்டு பழி கூறுதல், ஒருவனுடைய பாவினை ஏற்றி மற்றொருவனுடைய பாவாகக் கட்டுதலோடு பொருத்தம் உடையதாகும். "ஒன்றேற்றி வெண்படைக்கோள் ஒன்று' என்பது பழமொழி.