பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உறுகண் பலவும் உணராமை கந்தாத்தறுகண்மை ஆகாதாம் பேதை - "தறுகண்பொறிப்பட்ட வாறல்லால், பூணாது'என் றெண்ணி
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உறுகண் பலவும் உணராமை கந்தாத்
தறுகண்மை ஆகாதாம் பேதை - "தறுகண்
பொறிப்பட்ட வாறல்லால், பூணாது'என் றெண்ணி
அறிவச்சம் ஆற்றப் பெரிது. (பாடல்-220)

தனக்கு வந்து நேருகின்ற துன்பங்கள் பலவற்றையும் இன்ன வகையால் அவை வந்தன என அறியாதிருக்கின்ற அறியாமையையே தன் வாழ்வுக்குப் பற்றுக்கோடாகக் கொண்டிருப்பவன் பேதையாவான். அவன் என்றும் அதனை வெல்லும் வெற்றியுடையவன் ஆகவே மாட்டான். "வெற்றி பெறல்' என்பது, ஊழ்வினைப் பயனால் வந்து வாய்த்த வழியே அல்லாமல், ஒருவரின் தன்முயற்சியினாலே மட்டும் அடையக்கூடியதன்று என்று நினைத்து, அந்த அறிவினால் உண்டாகும் அச்சமே, அந்தப் பேதைக்கு அதிகமாயிருக்கும். "அறிவச்சம் ஆற்றப் பெரிது' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com