சொற்கூடு: புதுகை புழங்கும் சொற்கள்

நொந்து அம்பலப்படுறேன். நொந்து போதல். (எ.கா.) "இதுக்கு முன்னே இந்தளவுக்கு நான் நொம்பலப்பட்டதில்ல'.

நொம்பலப்படுறேன்

நொந்து அம்பலப்படுறேன். நொந்து போதல். (எ.கா.) "இதுக்கு முன்னே இந்தளவுக்கு நான் நொம்பலப்பட்டதில்ல'.

ஒத்தாசன

ஒத்தாசை. ஒத்த துணை, பக்க பலம். (எ.கா.) "புருச இல்லாதவளுக்கு மாமியாதே ஒத்தாசனயா இருக்கணும். நீங்களே இப்படி நடந்துக்கிட்டா எப்படி?'

தவிதாயப்படுறா

தவிக்கிறாள், ஏங்குகிறாள். (எ.கா.) "மவளுக்கு நல்ல மாப்ளயா திகைய தவிதாயப்படுறா'.

தாட்டி

தாட்டியம். பெரிய. (எ.கா.) "தாட்டியான ஒடம்ப வச்சிக்கிட்டு என்னமா ஓடுறா பாரு'.

நோண்டுறான்

சீண்டுதல், வம்பு இழுத்தல். (எ.கா.) "அவன ஏன் நீ நோண்டிக்கிட்டிருக்கே'.

பிக்கலு

நச்சரிப்பு, அடம். (எ.கா.) "கைமாத்துக் கேட்டு ஒரே பிக்கலு'.

ராத்தலு

ஓய்வு, நிம்மதி. (எ.கா.) "ராத்தலு இல்லாம ஒழச்சி என்னாவப் போவுது'.
சீப்பட்டு கெடக்கேன் இச்சீப்பட்டு கிடக்கிறேன், சீரழிந்து கிடக்கிறேன். (எ.கா.) "அந்த மனுசன நான் கட்டிக்கிட்டு சீப்பட்டுக் கெடக்கேன்'.

சில்லுனி

சிறிய, சின்னச் சின்ன, சிறுமை. (எ.கா.) "சில்லுனி பிரச்சனெகள விட்டுத்தொல'.
செலாக்குத்து நேர்த்துக்கடன், விலாக்குத்து. நீண்ட கம்பியை விலா பக்கங்களில் குத்திக்கொண்டு கோயிலில் ஆடும் ஆட்டம். "லாக்குத்து' என்றும் சொல்வர்.

வஞ்சான

வைந்தானை, கோலாட்டம். இசைக்கருவி, கோல்களில் வண்ணக் காகிதங்களை ஒட்டிக்கொண்டு ஆடும் ஆட்டம்.

எவ்வுது

குதிப்பது, தாவுது. (எ.கா.) "அடிக்க அடிக்க பந்து எவ்வுறத பாரு'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com