பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

புனத்து இடங்களிலே, கோட்டான் கூப்பிட்டுக் கொண்டிருக்கும் குளிர்ந்த மலைகளை உடைய நாடனே!
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

நினைத்த இதுவென்றந் நீர்மையே நோக்கி
மனத்தது அறிந்தீவார் மாண்டார்-புனத்த 
குடிஞை இரட்டும் குளிர்வரை நாட!
கடிஞையில் கல்லிடுவார் இல்.  (பாடல்-126)


புனத்து இடங்களிலே, கோட்டான் கூப்பிட்டுக் கொண்டிருக்கும் குளிர்ந்த மலைகளை உடைய நாடனே! ஒருவன் பிச்சை எடுத்து உண்ணும் ஓட்டிலே போய்க் கல்லைக் போடுபவர்கள் உலகில் எவரும் இல்லை; ஆனால், அறிவினாலே மாட்சிமை உடைய சான்றோர்களோ, தம்மிடத்தே இரந்து வருபவர் "தம் உள்ளத்திலே எண்ணியது இது' என்று அவருடைய தன்மை யையே ஆராய்ந்து பார்த்து, அவர் மனத்திலுள்ளதை அறிந்து, அதற்கேற்பக் கொடுத்து உதவுபவராகவே இருப்பார்கள். "கடிஞையில் கல்லிடுவார் இல்' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com