பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உலக நாடுகளை ஒருசேர வென்று ஆளவேண்டும் என்ற கொள்கை உள்ள அரசர், தன்னை எல்லைப் படுத்திக் கொள்ளாமல் தனக்கு ஒரு காலத்துத் தீமை செய்தவரையும் இனிய சொல்லாடல் மூலம் அன்பாகப் பேசி அணைத்துக் கொள்ளுவர்.
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்


எல்லை ஒன்று இன்றியே இன்னா செய்தாரையும்,
ஒல்லை வெகுளார், உலகு ஆண்டும், என்பவர்,
சொல்லின் வளாஅய், தம் தாள் நிழற்கீழ்க் கொள்பவே,
கொல்லையில் கூழ் - மரமே போன்று.  (பாடல்: 272)

உலக நாடுகளை ஒருசேர வென்று ஆளவேண்டும் என்ற கொள்கை உள்ள அரசர், தன்னை எல்லைப் படுத்திக் கொள்ளாமல் தனக்கு ஒரு காலத்துத் தீமை செய்தவரையும் இனிய சொல்லாடல் மூலம் அன்பாகப் பேசி அணைத்துக் கொள்ளுவர். தோட்டம் வைக்க விரும்புகின்றவர் நல்லன தரும் எல்லா மரங்களையும் வைத்து வளர்த்துக் கொள்ளுதல் போன்றவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com