பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

முன்னோடி கவிஞரின் பார்வையில் வஞ்சகத்தின் தன்மை
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தலைமை கருதும் தகையாரை வேந்தன்

நிலைமையான் நேர் செய்திருத்தல் - மலைமிசைக்

காம்பு அனுக்கும் மென் தோளாய்! அஃதுஅன்றோ, ஓர் அறையுள்

பாம்பொடு உடன் உறையுமாறு. (பாடல்: 349)

மலையில் ஓங்கி வளர்ந்துள்ள மூங்கிலின் வழவழப்பைத் தோற்கடிக்கும் மெல்லிய தோள்களை உடையவளே! வேந்தன் தனக்குப் போட்டியாகத் தலைமை இடத்தை அடைய வஞ்சகத் திட்டம் வகுத்து இருக்கும் ஒருவனை அருகு வைத்துப் பெருமை படுத்துவது ஒரே அறையில் பாம்போடு சேர்ந்து தங்குவதற்கு ஒப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com