தலைக்கொண்ட தம் கருமம் தாம் மடிக் கொண்டு,
கடைப்பிடி இல்லார்பால் வைத்து, கடைப்பிடி
மிக்கு ஓடி விட்டுத் திரியின், அது பெரிது
உக்கு ஓடிக் காட்டிவிடும். (பாடல்: 377)
ஒரு செயலை மேற்கொண்டவர் மேற்கொண்டபடி செய்து முடித்தல் வேண்டும். அவ்வாறு முடிக்காது செயல் உறுதி இல்லாதவர் இடத்து ஒப்படைத்து எடுத்த செயலை எடுத்து முடிக்கும் உறுதியைக் கைவிட்டு அங்கும் இங்கும் திரிந்தால் மூதேவி வாழும் இடத்தை முடிக்காச் செயல் கொண்டு சேர்க்கும்.