

'அகத்தாரே வாழ்வார்?' என்று அண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர், புறக்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி இருப்பரே, மேலைத்
தவத்தால் தவஞ்செய்யா தார்.
(பாடல் 31 அதிகாரம்: அறன் வலியுறுத்தல்)
முன் பிறவிகளிலே செய்த தவத்தின் பயனாக, நல்லறிவு உடையவர்களாகித் தவஞ்செய்பவரோ இளமையிலேயே தவநெறிப்பட்டு உள்ள உறுதியுடன் விளங்குவார்கள். அவ்வாறின்றித் தாமும் தவஞ்செய்வோமென்று போலியாக முயல்பவர்களோ, பசியால் இரந்துண்ண முயன்றதன் காரணமாக உள்ளத்து உறுதியற்றவராகின்றனர். அது மேலைத்தவம் இன்மையால் வந்தது. அவர் துன்பமும் முழுக்கப் பற்று விடாமையால் நேர்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.