சுடச்சுட

  
  6avn4

  சித்தமெல்லாம் சிவமயமே' என்று வாழ்ந்த சித்தர்கள் வணங்கிய ஈஸ்வரன் ஆலயங்கள் தென்னாட்டில் பல உள்ளன. அவற்றில் ஒன்று சித்தமல்லி. இத்தலத்தில் உள்ள ஈஸ்வரன், பெருமாள், விநாயகர் ஆலயங்கள் சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணி செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 8ஆம் தேதி மஹாகும்பாபிஷேகம் நடை

   பெறுகிறது.

   சித்தமல்லியில் அபிராமி அம்மன் சமேத குலசேகரஸ்வாமி திருக்கோயிலும், ஸ்ரீதேவி - பூதேவி சமேத

   ஸ்ரீவரதராஜர் பெருமாள் திருக்கோயிலும், ஸ்ரீ கல்யாண விநாயகர் ஆலயமும் உள்ளன. இத்திருக்கோயில்களின் அருகே ஸ்ரீசுப்ரமண்ய யதீந்தராள் என்று அழைக்கப்படும் மகானின் அதிஷ்டானமும் உள்ளது. 1933ஆம் ஆண்டு மகா சமாதி அடைந்த இந்த மகான், காஞ்சி மகாசுவாமிகளுக்கு சில காலங்கள் குருவாக இருந்து வேதங்கள் கற்றுக்கொடுத்தவர்.

   புராண வரலாறு!: பாண்டவர்கள் வனவாசத்தின் பொழுது சித்தம் கலங்கிய நிலையில் இருந்தனர். சித்தர்களால் வணங்கப்பட்ட குலசேகரப் பெருமானை வழிபட்ட பிறகு அவர்கள் சித்தம் தெளியப் பெற்றனர் என்றும், அதனால் இத்தலத்திற்கு சித்தமல்லி என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டதாகவும் புராண வரலாறு. முன்பு இந்த ஊர் "முன்னூதி மங்கல அக்ரஹாரம்' என்று அழைக்கப்பட்டது. தனக்கு தரிசனம் தரவில்லையே என்ற ஆதங்கத்தில் இறைவன் மீது அர்ஜுனன் எய்த அம்பின் வடுவை இன்றும் இங்கு வீற்றிருக்கும் ஈசனின் திருமேனியில் காணலாம்.

   மன்னர்களின் திருப்பணி! : கட்டடக் கலை நுட்பம் மற்றும் புராண வரலாறுகளின்படி இவ்வாலயம் சுமார் 2000 வருடங்களுக்கு முற்பட்ட பழமையான ஆலயமாகக் கருதப்படுகிறது. 11ஆம் நூற்றாண்டில் மன்னர் குலசேகரப் பாண்டியன் இவ்வாலயத்தை கட்டியதாகவும், பின்னர் சோழ மன்னர்கள் மற்றும் நாயக்க மன்னர்கள் மூலம் திருப்பணிகள் பல செய்யப்பட்டதாகவும் கல்வெட்டுகள் விளக்குகின்றன. கி.பி. 1256ஆம் ஆண்டு கல்வெட்டில் "ராஜேந்திர சோழ வளநாட்டு புறக்கரம்பை நாட்டு சித்தமல்லி சதுர்வேதி மங்கலத்து' என்று காணப்படும் குறிப்புகளிலிருந்து இந்த ஊரின் பெயரை அறியமுடிகிறது.

   ஆலய சிறப்புகள்!: ஒரு சிவன் ஆலயத்திற்கே உரிய அனைத்து சந்நிதிகளும் அமையப்பெற்று அழகுற திகழும் இவ்வாலயத்தில் தண்டாயுதபாணி சிலை மிகவும் கலை நயத்துடன் காணப்படுகிறது. ஒரே கல்லினால் ஆன அற்புத வடிவம். திருக்கரத்தில் உள்ள தண்டத்தைத் தட்டினால் வெண்கல ஓசை

   கேட்கிறது.

   பழநிக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக் கடனை இங்கு செலுத்தலாம் என்கின்றனர் கிராம மக்கள். இவ்வாலயத்தில் உள்ள கிணறு இறைவனால் ஏற்படுத்தப்பட்டது என்பதும் வரலாறு. மற்ற இடங்களில் உப்புச் சுவையாக இருந்தாலும் இக்கிணற்றில் மட்டும் நல்ல நீராக இருப்பதும் சிறப்பு.

   சித்த சுவாதீனம் இல்லாதவர்கள் இத்தலத்து ஈஸ்வரனை வழிபட்டு பலன் பெறலாம். ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் வேண்டுவோருக்கெல்லாம் வேண்டும் வரங்களைப் பொழிபவராக விளங்கு

   கிறார்.

   திருப்பணி!: காலப்போக்கில் சிதிலமடைந்த சிவன், பெருமாள், விநாயகர் ஆலயங்களில் இந்து சமய அறநிலையத்துறை ஒத்துழைப்போடு, குலசேகரஸ்வாமி கைங்கர்ய சபா மற்றும் கிராம வாசிகள் மூலம் திருப்பணிகள் நடந்துள்ளன. ஏப்ரல் 6ஆம் தேதி பூர்வாங்க ஹோம பூஜைகள் தொடங்குகின்றன. அதே தினத்தில் மகானின் அதிஷ்டானத்தில் மகந்யாச ருத்ராபிஷேகமும் நடைபெறுகிறது. மேலும் தகவலுக்கு: 98400 53289/ 9788050170

   அமைவிடம்!: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து முத்துப்பேட்டை செல்லும் வழியில் பெருகவாழ்ந்தான் அருகில் உள்ளது சித்தமல்லி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai