சுடச்சுட

  
  v2

   காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்திற்கு அருகில் உள்ளது ஊத்துக்காடு கிராமம். இங்குள்ள சிவன் ஆலயம் மிகப் பழமையானது. 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள். 9ஆம் நூற்றாண்டில், கம்பவர்மன் என்ற மன்னர் காலத்தில் திருப்பணி வேலைகள் நடைபெற்ற செய்தியினை கல்வெட்டு குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. முற்றிலும் சிதைந்த நிலையில் தரை மட்டத்திற்கு கீழே புதையுண்ட இந்த ஆலயத்தை கிராம மக்கள் கடந்த 2009ஆம் ஆண்டு சீர்படுத்தத் தொடங்கினர். 2010ஆம் ஆண்டு பாலாலய திருப்பணி நடைபெற்றது. இங்குள்ள மூலவர் லிங்கத் திருமேனியைத் தவிர அம்மன், வள்ளி - தெய்வானையுடன் முருகன், நவகிரகம், கோஷ்ட தெய்வங்கள் உள்ளிட்ட அனைத்து விக்ரஹங்களும் புதிதாக செய்யப்பட்டுள்ளன. திருப்பணி வேலைகள் முடிவுற்று தற்போது புதுப்பொலிவுடன் திகழ்கிறது இந்த ஆலயம். கடைசியாக எந்த நூற்றாண்டில் குடமுழுக்கு நடந்தேறியது என்பதே தெரியாத நிலையில் பெரியநாயகி சமேத மகாபிங்கேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறுகிறது. யாகசாலை பூஜைகள் இன்று (31.8.2012) தொடங்குகின்றன. மேலும் தகவலுக்கு 97870 88964.

   அமைவிடம்: சென்னை, தாம்பரத்திலிருந்து வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் ஊத்துக்காடு கூட்ரோட் நிறுத்தத்தில் இறங்கி இவ்வாலயத்தை அடையலாம். காஞ்சி, வாலாஜாபாத்திலிருந்து மினி பஸ்களும் இயக்கப்படுகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai