மாசியில் வரும் மாப்பிள்ளை...

மாசி மகோற்ஸவம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றாலும், காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் இங்கே எழுந்தருள்கிறார்.
மாசியில் வரும் மாப்பிள்ளை...

மாசி மகோற்ஸவம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றாலும், காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் இங்கே எழுந்தருள்கிறார். முன்பொரு காலத்தில் திருக்கண்ணபுரம் பெருமாள் கோயிலில் வழிபட வந்தார் அப்பகுதியை ஆண்ட மன்னர். அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு பெருமாளை நோக்கினார் அர்ச்சகர். பூமாலை இல்லை. எனவே, தனது மனைவிக்கு ஏற்கெனவே சூட்டி அழகு பார்த்த பூமாலை தம் வசம் இருந்ததை எடுத்து அரசனிடம் கொடுத்தார். அதில் நீளமான கூந்தல் முடி இருந்தது கண்டு கடும் கோபமுற்று, அர்ச்சகரை நோக்கினார் மன்னர். 

அர்ச்சகரும் வேறு வழியின்றி பெருமாளுடைய முடிதான் என்று கூறிவிட்டாராம். ""மறுநாள் வருவேன், நீ கூறியபடி பெருமாளிடம் முடி இல்லையென்றால் கடும் தண்டனை தருவேன்'' என்று கூறிச் சென்றுவிட்டார் மன்னர். அர்ச்சகருக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போக்க நினைத்த எம்பெருமான், மறுநாள் தலையில் முடியுடன் மன்னருக்குக் காட்சி தந்தார். எனவே உற்ஸவர் சௌரிராஜப் பெருமாள் என்ற திருநாமத்தோடு அருள்புரிகிறார். மூலவரின் திருநாமம் நீலமேகப்பெருமாள்.

சௌரிராஜப் பெருமாள் மாசி மகோற்ஸவத்தில் திருமலைராயன்பட்டினத்தில் உள்ள கடற்கரை கிராமமான பட்டினச்சேரிக்கு எழுந்தருளுகிறார். அவ்வகையில் வரும் 25ஆம் தேதி இங்கே சிறிய பல்லக்கில் வரும் பெருமாள், இங்குள்ள வெள்ளை மண்டபம் என்னும் பகுதியில் அலங்கரிக்கப்படுகிறார். தங்க கருட வாகனத்தில் வீற்றிருந்தவாறு, நெற்கதிர்கள் கொத்துக் கொத்தாக தோரணம்போல் தொங்கவிடப்பட்டிருக்கும் பவழக்கால் சப்பரத்தில் பட்டினச்சேரிக்கு எழுந்தருளுகிறார். நெல் விளைச்சல் அதிகமாக வேண்டுமென்ற நம்பிக்கையில் திருமலைராயன்பட்டினம் மக்கள் பவழக்கால் சப்பரத்தில் இந்த நெல் தோரணங்களைக் கட்டுகிறார்கள்.

சௌரிராஜப் பெருமாளை பட்டினச்சேரி மீனவ மக்கள் "மாப்பிள்ளை பெருமாள்' என்றே அழைக்கின்றனர். புதுமாப்பிள்ளைக்கு அளிப்பதைப் போன்று சகல மரியாதையையும் பெருமாளுக்கு அளிக்கின்றனர். சௌரிராஜப் பெருமாளுடன் திருமலைராயன் பட்டினத்தில் எழுந்தருளும் வரதராஜப் பெருமாள், வீழிவரதராஜப் பெருமாள், பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், ரகுநாதப் பெருமாள், கரியமாணிக்கப் பெருமாள், நித்யகல்யாணப் பெருமாள், கோதண்டராமர் ஆகியோரும் பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்குகின்றனர். அமைவிடம்: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது திருமலைராயன்பட்டினம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com