திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், ஆலத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தர்யநாயகி அம்பிகா சமேத ஸ்ரீ பிபீலிகாதீஸ்வரர் (எறும்பீஸ்வரர்) சுவாமி ஆலயம் சிறப்பு வாய்ந்ததாகும்.
கர, தூஷர் என்ற இரு அரக்கர்களின் மமதையை அடக்கவேண்டுமானால், தேவர்கள், பிபீலிகம் என்று சொல்லக்கூடிய எறும்பு வடிவில் வந்து தன்னை பூஜை செய்தால் அசுரர்களை அழித்து அவர்களின் துயர் நீக்குவதாகக் கூறினார்.
அதன்படி அவர்கள் எறும்பு வடிவத்தில் பூலோகம் வந்து இத்தலத்து இறைவனை பூஜை செய்தனர். அதனாலேயே இறைவனுக்கு, எறும்பீஸ்வரர் எனும் திருநாமம் உருவாயிற்று.
ஜூலை 2 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. மேலும் அரசமரத்து விநாயகர், ஸ்ரீபத்ரகாளியம்மன், ஸ்ரீகாமாட்சி மாரியம்மன், ஸ்ரீமன்மத சுவாமி, ஸ்ரீமாவுடை ஐயனார், ஸ்ரீவீரன், ஸ்ரீபிடாரியம்மன், ஸ்ரீபாம்புலியம்மன் ஆகிய கிராம தேவதைகளின் ஆலயங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. பக்தர்கள் இத்திருப்பணியில் கலந்து கொண்டு இறைவன் அருளைப் பெறலாம்.