ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 திவ்ய தேசங்களில் நடு நாட்டுத் திருப்பதிகளில் ஒன்றாகத் திகழும் திருக்கோவலூர் திரிவிக்ரம சுவாமியை முதலாழ்வார்கள் ஒருசேர தரிசித்து மங்களாஸôஸனம் பெற்ற தலமாகும். அதனால் திவ்யபிரபந்தம் விளைந்த திருப்பதி என்ற பெருமையை மட்டுமல்லாமல் பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரங்களில் ஒன்றாக போற்றப்படும் தலமாகவும், தசாவதாரத்தில் ஓங்கி உலகளந்த உத்தமனாகவும் காட்சிதரும் இத்திருக்கோயிலில், ஸ்ரீ திரிவிக்ர சுவாமி, ஸ்ரீ புஷ்பவல்லித் தாயார், ஸ்ரீ ராமர், ஸ்ரீ வரதராஜர், ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, ஸ்ரீ வாமனன், ஸ்ரீ கருடன், துவாரபாலகர்கள், ஸ்ரீ பீடம், ஸ்ரீ மடப்பள்ளி நாச்சியார் சந்நிதி விமானங்கள், சோபன மண்டபம், பிரகாரங்கள் ஆகியவை திருப்பணிகள் செய்யப்பெற்று மஹா சம்ப்ரோஷணம் 4-7-2014 அன்று ஸ்ரீவைகாசன பகவத் சாஸ்திர முறைப்படி நடைபெறவுள்ளது. இதற்கான யாகசாலை அங்குரார்ப்பணம் ஜூன் 30 அன்று தொடங்கி 5 நாட்கள் விமரிசையாக நடைபெறவுள்ளது. பக்தர்கள் இந்த மஹா சம்ப்ரோஷணத்தில் பங்கு கொண்டு பயன் பெறவும்.