Enable Javscript for better performance
திருத்தணி முருகன் ஆட்கொண்ட திருவாரூர் தீட்சிதர்- Dinamani

சுடச்சுட

  

  திருத்தணி முருகன் ஆட்கொண்ட திருவாரூர் தீட்சிதர்

  By எஸ். வெங்கட்ராமன்  |   Published on : 27th March 2014 04:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  thiruthani

  தெய்வ அருள் நிரம்பப்பெற்று இசை மேதைகளாக விளங்கியவர்கள் சங்கீத மும்மூர்த்திகள் என்று போற்றிக் கூறப்படும் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள். ஸ்ரீசியாமா சாஸ்திரிகள் மற்றும் ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதர். இம்மூவரும் அவதரித்தது ""பிறந்தால் முக்தி தரும்'' திருத்தலமான திருவாரூரில் என்பது சிறப்பு. மேலும் மூவரும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்.

  இவர்களில் இளையவரான தீட்சிதர் 1775-ஆம் ஆண்டு பங்குனி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தார்.

  இவரது வாழ்க்கையில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் அரிய நிகழ்ச்சிகளில் முக்கியமானது காசியில் குளித்துக்கொண்டு இருக்கும் தருணத்தில் அவரது கரங்களில் குருவின் அருளால் தெய்வத் தன்மை வாய்ந்த "ஸ்ரீராம்'' என்று சம்ஸ்கிருத மொழியில் பொறிக்கப்பட்ட வீணை ஒன்று கிடைத்தது (அந்த தெய்வீக வீணை இன்றைக்கும் தீட்சிதரின் 6-ஆவது தலைமுறை பரம்பரையாரிடம் உள்ளது).

  கலைவாணியின் அருளால் பெரும்பேறு பெற்ற தீட்சிதருக்கு, முருகப்பெருமான் திருத்தணியில் ஒரு வயோதிகர் வடிவில் காட்சி கொடுத்து அவரது வாயில் கற்கண்டு கட்டிகளை ஊட்டி ஆட்கொண்டான். அன்றுதான் தனது முதல் கீர்த்தனையை பாடத் தொடங்கினார்.

  திருவாரூர் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகமலாம்பிகையின் பேரில் இயற்றிய ஒன்பது கீர்த்தனைத் துதிகளே "நவாவரணக் கிருதிகள்' என்ற பிரசித்தமான இசைக்கீர்த்தனைகள். இவைகளில் அளப்பரிய மந்திர சக்தி பிரபாவங்களைக் கொண்டிருப்பதால் அமோகமான பலன்களைத் தரவல்லது. ஸ்ரீதீட்சிதரை நினைவுகூறும்வகையில் 1976-ஆம் ஆண்டு இந்திய அரசு தபால் முத்திரை வெளியிட்டுச் சிறப்புச் செய்துள்ளது.

  இறுதி நாள்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் வாழ்ந்த தீட்சிதர் ஒரு தீபாவளித் திருநாளில் முருகப்பெருமானுக்கு உகந்த கந்தசஷ்டி துவக்க நாளில் முக்தி அடைந்தார். அந்த இடத்தில் தற்போது ஒரு மணிமண்டபம் உள்ளது.

  இங்கு விநாயகர், முருகன், மீனாட்சி அம்மன் மற்றும் தீட்சிதர் உருவச்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தினசரி பூஜைகளும், வழிபாடுகளும் தீட்சிதரின் ஜெயந்தி மற்றும் ஆராதனை விழாக்களும் நடைபெற்று வருகிறது.

  நாதஜோதி ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதர் நினைவுக்கமிட்டியினர் ஸ்ரீதீட்சிதரின் 240-ஆவது ஜெயந்தி விழாவை எட்டயபுரத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் ஏப்ரல் 3 மற்றும் 4-ஆம் தேதி இரு நாள்களிலும் நடத்துகின்றனர்.

  (ஏப்ரல் 3 - பங்குனி கிருத்திகை - தீட்சிதரின் ஜெயந்தி நாள்). அவரது கீர்த்தனைகளைப் பாடவிருக்கும் அனைவருக்கும் நினைவுக்கமிட்டி வாய்ப்பளித்து வருகிறது.

  தொடர்புக்கு: 98948 97022, 94863 80555.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai