சுடச்சுட

  

  ஓசூர்- பெங்களூர் நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 2 கீ.மீ. தொலைவில் உள்ள கருமாரி அம்மன் லே அவுட் என்ற இடத்தில் அருள்மிகு கற்பக கருமாரியம்மன் தரிசனம் தந்து தேடி வரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறாள்.

  இவ்விடத்தில் அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு சுமார் 20 வருடங்களாக நித்ய பூஜையும்,விஷேசமாக ஸ்ரீ மஹா சண்டி யாகமும் அவ்வப்போது நடத்தப்படுகின்றது. மேலும் பெüர்ணமி, அமாவாசை நாள்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.இவ்வாலயத்தில் ஸ்ரீ மஹா கணபதி மற்றும் ஸ்ரீ சுப்ரமணியர் துவார தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனர். தென்முகமாக ஸ்ரீ தட்சிணாமூர்த்தி அமைந்துள்ளார். ஸ்ரீ லலிதாம்பிகை ஸிம்ஹ வாஹினியாகவும் ஸ்ரீ கருமாரி அம்மன் வீதிவுலா அம்மனாகவும் ஸ்ரீ சுதர்சனர், ஸ்ரீ யோக நரசிம்மர் உற்சவமூர்த்திகளாகவும் விளங்குகின்றனர்.திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டும் பக்தர்கள் நாளும் அம்மனைத் தேடி வந்து நல்லருள் பெறுகின்றனர்.

  தொடர்புக்கு: 9894517727

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai