சுடச்சுட

  

  "இருக்கு ஓதும் அந்தணர்கள் சூழ்

  புதுவாபுரி எங்கள் பிரான்

  மறுக்கோன்தயர் வாழ் வடபெரும்கோயில்

  திருக்கோபுரத்துக்கு இணை அம்செம்பொன்

  மேரு பருவதம் அன்றி உவமானம் பனிப்பில்லையே!'

  -என்று மேரு மலைக்குச் சமமானதாக வடபத்ரசயனரின் திருக்கோயில் ராஜகோபுரத்தை கம்பன் புகழ்கிறார்.

  இப்பெருமை மிக்க ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு வடபத்ரசயனர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆண்டாள் ஆலயத்தில் தற்போது கும்பாபிஷேகத் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

  இத்திருப்பணிகளில் முக்கியமானது ஆண்டாள் சந்நிதி விமானம் தங்கத்தில் உருவாக்கப்படுவதுதான். இந்த விமானத்தில் 75 கிலோ தங்கத்தகடுகள் பதிக்கப்படவுள்ளதால் தற்போது தங்கத்தகடுகளை சிற்பங்களாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

  மேலும், வடபத்ரசயனர் கோயிலின் பிரதான கோபுரம் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையால் புதுப்பிக்கப்பட்டு பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளன. பக்தர்கள், ஆண்டாள் திருக்கோயில் திருப்பணியில் பங்கு கொண்டு நலம் பெறலாம்.

  - வ. ஜெயபாண்டி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai