Enable Javscript for better performance
ஸ்ரீ ராதா கல்யாண மகோத்சவம்- Dinamani

சுடச்சுட

    

    கலியுகத்தில் பகவானை அடைய நாமசங்கீர்த்தனம் ஒன்றே வழி என பெரியோர் வகுத்துள்ளனர். அதன்படி பாகவத நாமசங்கீர்த்தன சம்பிரதாயப்படி கல்யாண உத்சவங்கள் நாடெங்கிலும் மார்கழி, தை மாதங்களில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

    திருச்சி, கீழவாளாடி அக்ரஹாரத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு லக்ஷ்மி நாராயணப்பெருமாள் திருக்கோயிலில் 23.01.2015 - 25.01.2015 வரை திருக்கல்யாண வைபவம் நடைபெறுகின்றது. 25 ஆம் தேதி, ராதா கல்யாண உத்சவத்துடன் உபய நாச்சியாருடன் பெருமாள் வீதி உலா வருதலும் ஆஞ்சநேயர் உத்சவமும் நடைபெறுகின்றது.

    பக்தர்கள் இந்த மகோத்சவத்தில் கலந்து கொண்டு இறையருள் பெறலாம். திருச்சி - லால்குடி பேருந்து மார்க்கத்தில் கீழவாளாடியை சென்றடையலாம்.

    தொடர்புக்கு: 98426 13975, 98946 70723.

    - எல். வெங்கடேஸ்வரன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai