சுடச்சுட

  

  தஞ்சை மாவட்டம் 69, சாத்தனூர், சேடத்தெருவில் உள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன், ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் பல்வேறு அமைப்புகள், மக்கள் ஒத்துழைப்புடன் ஜனவரி 26 ஆம்தேதி காலை 9 மணிக்கு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகமும், அன்றிரவு அம்பாள் வீதியுலா காட்சியும் நடைபெறும். பூர்வாங்க ஹோமங்கள், பூஜைகள் ஜனவரி 25 ஆம் தேதி ஆரம்பமாகிறது.

  தகவல்களுக்கு : 94444 31691.

  செங்கல்பட்டு திருவடிசூலத்தில் சுமார் 51 அடி உயரத்தில் மிகப் பெரிய கருமாரியம்மன் திருவுருவத்துடன் ஆதி பரமேஸ்வரி தேவி ஸ்ரீகருமாரியம்மன் ஆலயம் அமைய உள்ளது. முதற்கட்டமாக கருங்கல்லில்லான 32 அடி உயர திரிசூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சிவசக்திகளின் திருப்பாதுகையுடன் திருவடிகள் பலரும் பரிகாரம் செய்து வழிபடும் வகையில் அரிய பல தெய்வத்திருக் கோலங்களுடனும், ஒரே கல்லில் தேவியின் வாகனமான சிம்மத்திற்கும், பலிபீடத்திற்கும் பெரிய அளவில் உருவங்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26- ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அஷ்டபந்தன தேவி பிரதிஷ்டா, மஹாபலிபீட, சிம்ம, சூல கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை ப.புண்ணியக்கோட்டி மதுரை முத்து சுவாமிகளும், மற்றும் பக்தர்களும், திருவடிகளும் ஆதிபரமேஸ்வரி ஸ்ரீ கருமாரியம்மன் டிரஸ்ட் மூலம் செய்துள்ளனர்.

  தொடர்புக்கு : 9840500272.

  சீரடி மகான் பிரதிஷ்டை

  திருவள்ளூர், காக்களூர் அருள்மிகு சிவ விஷ்ணு ஆலயத்தில் தற்போது 46 ஆவது சந்நிதியாக "ஸ்ரீ சீரடி சாய்பாபா' பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இதற்கான மகாகும்பாபிஷேகம் ஜனவரி 26 ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. ஜனவரி 25 ஆம் தேதி கலச பூஜை, புருஷ சூக்த ஹோமங்கள் நடைபெறுகின்றன.

  தகவல்களுக்கு: 94431 19861.

  - எம். பசுபதி.

  திருக்கல்யாண மகோத்சவம்

  காஞ்சி மாவட்டம், மாம்பாக்கத்தில் உள்ளது ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில்! இங்கு ஸ்ரீ எதிராஜவல்லித்தாயார் சமேத ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் எழுந்தருளியுள்ளார். இத்தெய்வீக தம்பதிகளுக்கு வரும் ஜனவரி 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு நவகலச திருமஞ்சனமும், திருக்கல்யாண மகோத்சவமும் நடைபெறுகிறது. பக்தர்கள் இவ்வைபவத்தில் பங்கேற்று இறையருள் பெறலாம்.

  தொடர்புக்கு: 98840 96463.

  - கோமடம் ஸ்ரீ ராமன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai