சுடச்சுட

  
  suriyan

  மாதம் பிறந்து சூரிய பகவான் தனது ஏழு குதிரைகள் பூட்டிய தேரை வடக்கு நோக்கிச் சரியாகத் திருப்பி ஓட்ட ஆரம்பிக்கும் நாளை ரதசப்தமி என்பார்கள். அன்று சப்தமி திதி. இந்நாளில் ஏழு எருக்க இலைகள், எள், மஞ்சள், அட்சதை, சிறிது பசுவின் சாணம் ஆகியவற்றை தலையில் வைத்து நீர் நிலைகளில் ஸ்நானம் செய்தால் பாபங்கள் நீங்கும், நவக்கிரக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை! இதற்கு அர்க்கபத்ர ஸ்நானம் என்று பெயர். எருக்க இலைக்கு அர்க்கபத்ரம் என்ற பெயர் உண்டு. அந்த ஸ்நானத்தை சூரியனை நோக்கியபடி,

  ஸப்த ஸப்த ப்ரியே தேவி

  ஸப்தலோக ப்ரதீயிகே

  ஸப்த அர்க்கபத்ர ஸ்நானேன

  மம பாபம் வ்யபோஹய

  என்ற ஸ்லோகத்தை கூறியபடி ஏழுமுறை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  ரத சப்தமியை (26.01.15) ஒட்டிவரும் விசேஷ நாள் (அஷ்டமி திதி) பீஷ்ம தர்ப்பண நாள்! அதாவது பீஷ்மாஷ்டமி (27.01.15), பீஷ்ம பிதாமகர் உயிர் நீத்த நாளாகும். பாரதத்திலுள்ள பிள்ளைகள் எல்லாம் உன் பிள்ளைகள் தான், உனக்காக அனைவரும் தர்ப்பணம் செய்வார்கள் என்ற வரத்தை பகவான் கிருஷ்ணரிடமிருந்து பெற்றவர் பீஷ்மர். இந்நாளில் பெரியோர்கள் பீஷ்மருக்கு அர்க்ய பூஜை செய்வது வழக்கம். நேராக நிமிர்ந்து இருகைகளிலும் நீரை ஏந்தி நின்று "பீஷ்மம் தர்ப்பயாமி' என்று மூன்று முறை ஓதியபடி இணைந்த கரங்களைச் சற்று தாழ்த்தி சாய்த்து விரல் நுனிகளின் வழியே பூமியில் நீரை விடுதலே இந்த அர்க்ய பூஜை!

  - எஸ். வெங்கட்ராமன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai