Enable Javscript for better performance
கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    அருள்மிகு சப்த கன்னிமார் ஆலயம்

    வேலூர், அணைக்கட்டு தாலுக்கா, ஒடுக்கத்தூர் அடுத்த வெங்கண்ணாபாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ சப்த கன்னிமார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலய மகா கும்பாபிஷேக விழா 02.02.2015 அன்று காலை 9.00 மணியளவில் நடைபெறுகிறது. இதனையொட்டி, யாகசாலை பூஜை மற்றும் ஹோமங்கள் நடைபெறுகின்றன.

    தொடர்புக்கு: 80157 36108.

    - சிவசக்தி. எம். சரவணன்.

    அம்பலவர் கட்டளை ஸ்ரீ நிவாசப்பெருமாள்

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் உள்ளது அம்பலவர் கட்டளை கிராமம். இங்கு பரம்பரை வழிபாட்டில் ராமர் மடம் இருந்த இடத்தில் புதியதாக அமைக்கப்பட்ட திருக்கோயிலில் தனி சந்நிதி கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீ நிவாசப்பெருமாளுக்கு மகா சம்ப்ரோக்ஷண விழா, பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு நடைபெறுகிறது.

    தொடர்புக்கு: 90479 78654.

    திருவிடைமருதூர் ஸ்ரீவரதராஜ பெருமாள்

    தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் சாத்தனூர் தெலுங்குத் தெருவில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோயில்! இவ்வாலயத்தில் இந்து சமய அறநிலையத்துறையினராலும் வடக்கு மலையமான் நற்பணி மன்றத்தினராலும் பல்வேறு திருப்பணி வேலைகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. ஆலய மகாசம்ரோக்ஷண வைபவம் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு நடைபெறுகிறது. பூர்வாங்க ஹோமங்கள், பூஜைகள் ஜனவரி 30 ஆம் தேதி ஆரம்பமாகிறது.

    தொடர்புக்கு: 99765 68899/ 97516 93696.

    கோதண்டராமனுக்கு கோலாகல வைபவம்

    காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயிலின் திருப்பணி வேலைகள் முடிவுற்று, மகா சம்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. ஸ்ரீ அஹோபில மடம் 46 ஆவது பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கர், ஸ்ரீ ரங்கநாத யதீந்த்ர மகாதேசிகர் அனுக்ரஹத்துடன் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 8.00 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் நடைபெறுகிறது. அன்று மாலை திருக்கல்யாண வைபவமும் வீதி புறப்பாடும் நடைபெறும். முன்னதாக பூர்வாங்க ஹோமங்கள், பூஜைகள் இன்று (ஜனவரி 30) ஆரம்பமாகிறது.

    தொடர்புக்கு: 94440 84653.

    - கோமடம் ஸ்ரீராமன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai