சுடச்சுட

  

  தைபூசம் திருவிழா

  ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்

  தை மாதம் 20 ஆம் தேதி (03.02.15)தைப்பூச தினத்தன்றுகாலை 9.00 மணியளவில் வானகரம், ஓடமாநகரில் உள்ள அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயிலில் பால்குட திருவிழா நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு இறையருள் பெறலாம்.

  - ஜி. நடராஜன்.

  ஸ்ரீ சுயம்பு லிங்க சுவாமி திருக்கோயில்

  திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் உள்ள உவரி அருள்மிகு ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி திருக்கோயிலில் தைபூசத்திருவிழா ஜனவரி 27 ஆம் தேதி துவங்கியது. பிப்ரவரி 3 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் மங்கல இசை, மேளக் கச்சேரி, சமய சொற்பொழிவு, இன்னிசைக் கச்சேரி, பரத நாட்டியாஞ்சலி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

  தொடர்புக்கு: 04637 277382.

  - ப. க. சோ. த. இராதாகிருஷ்ணன்.

  தோரணமலை ஸ்ரீ முருகன் கோயில்

  நெல்லை மாவட்டம், தென்காசி- கடையம் செல்லும் பாதையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீ முருகன் கோயிலில் தைப்பூசத்திருவிழா 03.02.2015 அன்று சிறப்பாக நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி, சிறப்பு அபிஷேகம், திருக்கல்யாண உற்சவம், படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் ஆகியவை நடைபெறுகின்றன.

  தொடர்புக்கு: 99657 62002/ 94442 57521.

  - கே. ஏ. செண்பகராமன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai