Enable Javscript for better performance
சர்ப்ப தோஷம் நீங்க இழந்த சொத்து மீண்டும் பெற நிருநின்றவூர் பக்தவத்சல பெருமாள்!- Dinamani

சுடச்சுட

    

    சர்ப்ப தோஷம் நீங்க இழந்த சொத்து மீண்டும் பெற நிருநின்றவூர் பக்தவத்சல பெருமாள்!

    By dn  |   Published on : 05th June 2015 04:13 PM  |   அ+அ அ-   |    |  

    perumal

    ஒரு சமயம் மகாலட்சுமி தாயார் பெருமாளிடம் கோபம் கொண்டு பூவுலக்கிற்கு வந்தார். "பத்ரபுரி' என்று அழைக்கப்பட்ட இந்த தலத்தில், ஸ்ரீமந் நாராயணன் மனதுக்கு உகந்த துளசி வனம் இருப்பதைக் கண்டு, இவ்விடத்தில் நீண்ட காலம் வாசம் செய்தார்.

    அதன் காரணமாகவே இவ்வூர், "ஸ்ரீநிவாஸஷேத்திரம்' (திருநின்றவூர்) என்று அழைக்கப்பட்டது. பின்னர் மகாலட்சுமியின் தந்தையான சமுத்திர ராஜன் மகளைக் காணாது மிகவும் வருத்தமுற்று எங்கெங்கோ தேடி அலைந்தார். அப்படி தேடி வருகையில் இத்தலத்துக்கு வந்தார். மகளைக் கண்ட சமுத்திர ராஜன், "என்னைப் பெற்ற தாயே...

    என்னுடன் வந்துவிடு'' என்று அழைத்தார். ஆனால் மகாலட்சுமி அதை ஏற்கவில்லை.

    திரும்பிச்சென்ற சமுத்திர ராஜன், பெருமாளிடம் சொல்லி, பெருமாளை நேராகச் சென்று அழைக்கும் படியாகக் கேட்டுக்கொண்டார். தந்தையாரால் "என்னைப் பெற்றத் தாய்' என்று அழைக்கப்பட்டதால் இங்கு மகாலட்சுமி தாயார், "என்னைப் பெற்றத் தாயார்' (மத்ஸவித்ரீநாயிகா) என்ற திருநாமத்துடன் விளங்குகிறார். மகாலட்சுமியை பெருமாள்

    வந்து அழைக்க, கோபம் தணிந்த தாயார் பெருமாளுடன் பாற்கடலில் வாசம் செய்தார். மகாலட்சுமி தாயார் இத்தலத்தில் நித்யவாஸம் செய்கின்ற காரணத்தினால் எல்லா செல்வங்களும் நிறைந்து எழிலுடன் விளங்குவதாக இத்தலத்தினைப்பற்றி இவ்வாலய வரலாறு தெரிவிக்கிறது.

    108 திவ்ய ஷேத்திரங்களில் திருமங்கையாழ்வார் மற்றும் ஸ்ரீ ராமானுஜரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலமாகும். எம்பெருமானின் திருநாமம் "பக்தவத்சல பெருமாள்' (பத்தராவிப் பெருமாள்). இத்திருக்கோயிலில் தாயார்- பெருமாள் சந்நிதிகளுடன் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ ஆதிசேஷன், ஸ்ரீ விஷ்வக்úஸனர் (சேனை முதல்வன்)

    பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் அமையப்பெற்றுள்ளன. ஆலயத்தின் திருக்குளம் வருணபுஷ்கரிணி, வடமேற்கில் அமைந்துள்ளது.

    புரந்தரன் என்பவன் அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராட வேண்டும் என்று முடிவெடுத்து தீர்த்த யாத்திரை புறப்பட்டு வந்தாôன். அச்சமயம், அழகிய

    பெண்ணொருத்தியைக் காண நேர்கிறது. அவளுடன் சந்தோஷமாக பூமியை வலம் வருகிறான் புரந்தரன். பின்னர் தான் செய்த தவறு புரிய வருகிறது. இந்த பாவத்திலிருந்து எப்படி விடுபடுவது என்று நினைத்து வருந்துகிறான்.

    அப்போது கிடைத்த அசரீரி வாக்கின்படி "ஸ்ரீநிவாஸபுரம்' வந்து வருணபுஷ்கரிணி என்னும் தடாகத்தை அடைகிறான். பங்குனி மாதம், கிருஷ்ணபட்சம், திருவோண நட்சத்திரம் கூடின துவாதசி திதியன்று, உதய காலத்தில் நீராடி, அதன் கிழக்குக்கரையில் நின்று பக்தவத்சலனைத் தொழுது வழிபடுகிறான். அதன்படி, அவனது பாபங்கள் நீங்கப்பெற்று மோட்சத்தை அடைந்தான் என்று பிரஹ்மாண்ட புராணத்தின் பதினெட்டாம் அத்தியாயத்தில் ஸ்ரீ நாரத மகரிஷி, இந்த புஷ்கரணியின் சிறப்பினை எடுத்துரைக்கிறார்.

    இதேபோன்று, மார்க்கண்டேய மகரிஷியின் அருளுரைப்படி தர்மத்வஜன் என்னும் மன்னனும் வருணபுஷ்கரிணியில் நீராடி, தான் இழந்த நாட்டையும் செல்வத்தையும் மீண்டும் அடைந்தான் என்கிறது ஆலய வரலாறு! இத்தலத்தில் அவரவர் சக்திக்கு ஏற்றவாறு தானம் செய்து பெருமாளை தொழுதால் அனைத்து செல்வங்களும் பெற்று தனது குடும்பத்தாருடன் நீண்ட நெடுங்காலம் வாழ்வார்கள் என்பது ஐதீகம்!

    திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவர்களது தடைகள் நீங்கி நல்லபடியாக திருமணம் அமையப் பெறுவர். இங்குள்ள ஆதிசேஷன் சந்நிதியில் புதன் கிழமைகளில் விளக்கு ஏற்றி அர்ச்சித்து வழிபட்டால் ராகு, கேது தோஷங்கள் மற்றும் அனைத்து சர்ப்ப தோஷங்களும் நீங்கும். மேலும் வியாபாரம் பெருகும். இழந்த சொத்துக்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும். வேலை இழந்தவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்கள் இத்தலத்து பெருமாளையும் தாயாரையும் வழிபட நினைத்த காரியங்கள் தங்கு தடையில்லாமல் நிறைவேறும் என்கின்றனர் பக்தர்கள்.

    இத்திருக்கோயிலில் மாதாமாதம் விழாக்கள், உத்சவங்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் ஸ்ரீ ராமானுஜரின் திருநட்சத்திரத்தில் துவங்கி, ஒவ்வொரு மாதமும் பன்னிரு ஆழ்வார்களின் திருநட்சத்திரம் உத்சவங்கள், விழாக்கள் நடைபெறுகின்றன. மேலும் ஆனி மாத பெருமாள் கருட சேவை, மார்கழி வைகுண்ட ஏகாதசி, பகல்பத்து, இராப்பத்து, மாசிமகம் கருடசேவை உத்சவங்கள் இங்கு நடைபெறும் விழாக்களில் குறிப்பிடத்தக்கவை.

    - மோகனாமாறன்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp