தஞ்சை மாவட்டம், திருநறையூர் ஸ்ரீ ராமநாத சுவாமி கோயிலில் கொடிமரம் சிவன் சந்நிதிக்கு நேராக அல்லாமல் சனிபகவான் சந்நிதிக்கு நேரே உள்ளது. அருகில் காக வாகனம் உள்ளதுடன் சனிபகவான் தன் இரு மனைவியருடனும் இரு மகன்களுடனும் மேற்கு நோக்கி அமர்ந்துள்ளார். சனிபகவானுக்கு கருமை நிற ஆடை அணிவிப்பதில்லை. நீலநிற ஆடையே அணிவிக்கப்படுகிறது.
நிலைக்கண்ணாடி நடராஜர் சுசீந்திரம் கோயிலில் உள்ள நிலைக்கண்ணாடியே நடராஜராக வழிபடப்படுகிறது. கோயிலில் இரவில் இந்திரன் பூஜை செய்வதாக ஐதீகம் உள்ளதால் அர்த்தஜாம பூஜை நடைபெறுவதில்லை.
வெண்கல நாதம்
சேலம் மாவட்டம், ஆழ்வார்குறிச்சி திருத்தலத்தில் ஒரே கல்லினால் ஆன நடராஜர் வடிவம் உள்ளது. இதனை தட்டிப்பார்த்தால் வெண்கல நாத ஓசை வருவதை இன்றும் கேட்கலாம்.
வில்லேந்திய சிவபெருமான்
வில்லேந்திய வேலவர் வடிவம்போல் வில்லேந்திய சிவன் வடிவினை பண்ருட்டிக்கு அருகில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோயிலில் காணலாம்.
- சிவ உ. இராசமாணிக்கம்