Enable Javscript for better performance
நிகழ்வுகள்- Dinamani

சுடச்சுட

    

    மகாசம்ப்ரோக்ஷணம்

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கீழகபிஸ்தலம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் திருப்பணி வேலைகள் நிறைவுபெற்று மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெறுகின்றது.

    தொடர்புக்கு: பி.ராமகிருஷ்ணன்- 94437 01223.

    நாள்: 25.4.2016, நேரம்: காலை - 9.00 மணி.

    மகாகும்பாபிஷேகம்

    கல்லிடைக்குறிச்சி ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஆலயத்தில் பல வருடங்களுக்குப்பிறகு ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடாதிபதிகள் அனுக்கிரகத்துடன் புனராவர்த்தி அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.

    தொடர்புக்கு: வி.ஆர். சேவாசமாஜ் - 80985 61928/ 99407 71638.

    நாள்: 29.4.2016.

    ஸ்ரீ அம்மச்சாரம்மன் ஆலயம்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், மேல்மலையனூர் நகரில் ஸ்ரீ அம்மச்சாரம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஸ்ரீ செல்வகணபதி, ஸ்ரீ பாலமுருகர், ஸ்ரீ அம்மச்சாரம்மனுக்கு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.

    நாள்: 25.4.2016, நேரம்: காலை 9.30 - 10.30 மணி.

    சித்ராபௌர்ணமி திருவிழா

    சென்னை- 64, பெரியார் சாலை, அண்ணாநகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வைகுண்ட பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சித்திரை பௌர்ணமி திருவிழா (36 ஆம் ஆண்டு) சிறப்பாக நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகின்றது.

    நாள்: 21.4.2016.

    ஸ்ரீசர்வசக்தி கருமாரியம்மன் ஆலயம்: காஞ்சி மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் அரையப்பாக்கம் சக்திபுரத்தில் ஸ்ரீசர்வசக்தி கருமாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு 108 மூலிகை சிறப்பு அபிஷேகமும், லலிதா சகஸ்ரநாம பாராயணமும், குத்துவிளக்கு பூஜையும், மகாமேருவிற்கு நவாவர்ண பூஜையும் நடைபெறுகின்றன.

    தொடர்பிற்கு: 88873 02760/ 98402 86246.

    நாள்: 21.04.2016.

    திருவிளக்கு பூஜை

    கும்பகோணம் தாலுக்கா, திப்பிராஜபுரம், சென்னியமங்கலம் கிராமத்தில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ள இரட்டை லிங்கேஸ்வரர்கள் ஸ்ரீ உண்ணாமுலை அம்பிகா சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர், ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சொக்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் சித்திரா பௌர்ணமியன்று திருவிளக்கு பூஜை நடைபெறுகின்றது.

    தொடர்புக்கு: ஜி. சங்கர் - 94430 86587.

    நாள்: 21.4.2016. நேரம்: மாலை 6.00 மணி.

    தெப்பத் திருவிழா

    திருச்சி மாவட்டம், முசிறிவட்டம், குணசீலம் அருள்மிகு பிரஸன்ன வேங்கடாசலபதி பெருமாள் திருக்கோயில் பாபவினாஸ தீர்த்தக் குளத்தில் தெப்போத்சவம் நடைபெறுகின்றது.

    தொடர்புக்கு: கே.ஆர். பிச்சுமணி ஐயங்கார்- 89032 75310.

    நாள்: 22.4.2016.

    வருஷாபிஷேகம்

    காஞ்சி மாவட்டம், திருப்போரூர் அருகில் உள்ளது அருள்மிகு தையல்நாயகி அம்பாள் உடனுறை உத்ரவைத்யலிங்கேஸ்வரர் ஆலயம். மிகப் பழைமையான இந்த ஆலயத்தில் வருஷாபிஷேகம் நடைபெறுகின்றது. இத்திருத்தலம், தாம்பரம்- திருப்போரூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது.

    தொடர்புக்கு: 97909 99119.

    நாள்: 20.4.2016, நேரம் 9.00 - 10.00 மணி.

    திருப்பணி

    சென்னை- 30, செனாய்நகர், அப்பாராவ் தோட்டம், எண். 100, அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயிலில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கோயிலை புதுப்பித்து குடமுழுக்கு நடத்தும் பொருட்டு திருப்பணிகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் இவ்வாலய திருப்பணியில் பங்குகொண்டு நலம் பெறலாம்.

    ஸ்ரீ அக்னிகாளியம்மன் திருக்கோயில்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், களத்தூர்- சித்துக்காடு கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அக்னிகாளியம்மன் திருக்கோயில் மிகவும் சிதிலமடைந்து விட்ட நிலையில் ஆன்மிக அன்பர்களின் முயற்சியால் திருப்பணி வேலைகள் நடைபெறுகின்றன. பக்தர்களும் இத்திருப்பணியில் பங்குகொண்டு அருள் பெறலாம்.

    தொடர்புக்கு: 97873 54248/ 86082 13842.

    சித்திரைப் பெரும் திருவிழா

    புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா நடைபெறுகின்றது.

    நாள்: 17.4.2016 - 23.4.2016.

    அபயபிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோயில்: கரூர் மாவட்டம், கரூரில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் அருள்மிகு அபயபிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரைப்பெருவிழா கோலாகலத்துடன் துவங்கிநடைபெறுகின்றது. தேரோட்டம் ஏப்ரல் 21 ஆம் தேதி, காலை 8.30 மணிக்கு நடைபெறும்.

    நாள்: 15.4.2016 - 25.4.2016.

    பன்னிரு திருமுறை இன்னிசைப் பெருவிழா

    13 ஆம் ஆண்டு ஐநூற்றுக்கும் மேற்பட்ட திரு

    முறைக் கலைஞர்கள் பங்கேற்கும், பன்னிரு திருமுறை இன்னிசைப் பெருவிழா சைவசித்தாந்தசிவஞானப் பெருவேள்வி, சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறுகின்றது.

    நாள்: 18.4.2016 - 29.4.2016, நேரம்: காலை 8.30 - இரவு 7.30 மணி.

    ஸ்ரீ ராமநவமி உற்சவம்

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், கல்யாணராமநாதபுரம் ஸ்ரீ கல்யாண ராமசுவாமி திருக்கோயிலில் ஸ்ரீ ராமநவமி உற்சவம் நடைபெறுகின்றது.

    நாள்: 16.4.2016 - 27.4.2016.

    வார்ஷிக உற்சவம்

    காஞ்சி மாவட்டம், பொன்விளைந்த களத்தூர், வல்லிபுரத்தில் ஸ்ரீஅம்புஜவல்லீ நாயிகா சமேத ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் 9 ஆவது வார்ஷிக உற்சவம் நடைபெறுகின்றது.

    தொடர்புக்கு: 98408 16446.

    நாள்: 19.4.2016.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai