Enable Javscript for better performance
ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை!- Dinamani

சுடச்சுட

    
    sorna aakarshana bairavar

    பைரவர்களில் பலவகை உண்டு. காரணமாக தோன்றிய பயங்களையும், காரணமில்லாமல் ஏற்படும் பலவித இன்னல்களையும் முடித்து வைத்து இனிமையான வாழ்வு தருபவர் பைரவர். சிவபெருமானின் அஷ்டபைரவ ரூபங்களில் ஒரு வடிவம் ஸ்வர்ணாகர்ஷண பைரவர். இவர் தனது துணையான சக்தியை தன் மடியில் அமர்த்தி வலது கையில் ஸ்வர்ண கலசத்தை தாங்கியுள்ளார்.

    இவரை, பெüர்ணமி நாள்களில் முழுமலர் தாமரையை மாலையாகக் கட்டி சார்த்தி, பால் கொண்டு தயாரித்த இனிப்பு வகைகளை படைத்து மல்லிகைப் பூவால் அர்சிக்க வேண்டும். இதனால் ஸ்வர்ணம் வர்ஷிக்கும் அதாவது தங்கு தடையின்றி செல்வச் செழிப்பு உண்டாகும் என்றும், முறையாக பூஜை செய்ய நிறைவான வாழ்வு கிட்டும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    குருநாதர் ஸ்ரீதுர்க்கை சித்தர், மந்திர சாஸ்திரங்களில் வர்ணிக்கப்பட்ட இந்த ரூபத்தை ஒரு படமாக வரைந்து உருவகம் கொடுத்து மக்களின் வறுமை இருளை போக்க உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் ஆவார். 1956 ஆம் ஆண்டு சித்ரா பெüர்ணமியன்று இமயமலையில் இந்த படத்தை வெளிப்படுத்தினார்.

    தாம்பரம் - காஞ்சிபுரம் சாலையில் படப்பை நகரில் ஸ்ரீதுர்கை சித்தர் ஸ்தாபித்த ஸ்ரீ ஜெயதுர்காதேவி ஆலயம் உள்ளது. இங்கு மிகுந்த சாந்நித்யம் கொண்டு விளங்கும் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண மூர்த்திக்கு வரும் சித்ரா பெüர்ணமியன்று காலை சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    தொடர்புக்கு: 87544 00203.

    - அஸ்வமித்ரா

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai