Enable Javscript for better performance
ஐவகை லிங்கங்கள்- Dinamani

சுடச்சுட

    
    7

    போகலிங்கம், முக்திலிங்கம், வரலிங்கம், யோகலிங்கம், மோட்சலிங்கம் என ஐவகை லிங்கங்கள் உள்ளன. போக லிங்கம் ஆராதிப்பவர்களுக்கு போகங்களைக் கொடுக்கும். வரங்களை கொடுப்பது வரலிங்கம். யோக வழியில் செல்லும் ஆர்வத்தை அளிப்பது யோக லிங்கம். இவ்வாறு யோக வழியில் செல்வோருக்கு பிறப்பு, இறப்பு என ஓயாது சுழன்று வரும் சக்கரத்திலிருந்து விடுதலை விருப்பத்தை தருவது முக்திலிங்கம். நமது பிறப்புரிமையாகிய ஆனந்தம் என்ற மோட்சத்துக்கு வழிகாட்டுவது மோட்சலிங்கம்.

    யார் துணை?

    ராமபிரான் வனவாசம் செல்லும்போது தாயார் கௌசல்யா தேவி தன் குமாரனுக்கு பதினான்கு ஆண்டுகள் கெடாமல் இருக்கும் பட்சணத்தைக் கட்டிக் கொடுப்பது என யோசித்தாள். பிறகு நிரந்தர பட்சணமான தர்மத்தைக் கட்டிக் கொடுத்தாள். ""ராகவா! தைரியத்துடனும் நியமத்துடனும் நீ பாதுகாக்கும் தர்மமே உன்னைப் பாதுகாக்கும்'' என்று சொல்லி தர்மத்தை

    ராகவனுக்குத் துணை அனுப்பினாள்.

    - ஆர். மகாதேவன்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai