Enable Javscript for better performance
தட்சிணகாசி- Dinamani

சுடச்சுட

    

    * முருகப்பெருமானை வணங்க, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய் ஆகிய நாள்கள் உகந்தவை. திருவதிகையில் காணப்படும் வீரட்டேஸ்வரர் லிங்க உருவானவர். இவர் மேனியில் பதினாறு பட்டைகளைத் தாங்கியுள்ளார்.

    * திருச்சியிலிருந்து கரூர் வழியாக கோவை - ஈரோடு செல்கின்ற நெடுஞ்சாலையில் உள்ளது குளித்தலை. இங்கே அருள்பாலிப்பவர் கடம்பநாதர். இறைவி ""முற்றில்லா முலையம்மை'' என்று அழைக்கப்படுகிறார். வடநாட்டில் காசியைப் போன்று வடக்கு நோக்கி அமைந்துள்ள தென்னாட்டு திருத்தலம் என்பதால் இவ்வாலயத்தை, ""தட்சிணகாசி'' என்று அழைக்கிறார்கள்.

    * கும்பகோணம் - மயிலாடுதுறை பேருந்து தடத்தில் உள்ளது குத்தாலம். இங்கிருந்து திருமணஞ்சேரி செல்லும் பாதையில் உள்ளது மேலக்கோயில். இறைவனுக்கு திருமணம் நடந்த திருத்தலங்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன. ஆனால் இறைவனுக்கு திருமண வரவேற்பு நடந்த திருத்தலம் இது ஒன்றுதான். இங்கே அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ஐராவத நாதர். இறைவி மலர்குழல் நாயகி என்பதாகும்.

    - கே. பிரபாவதி

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai