Enable Javscript for better performance
நாக்பூரில் நாகபஞ்சமி!- Dinamani

சுடச்சுட

    
    5

    மகாராஷ்டிராவிலுள்ள நாக்பூர் எனும் நாகபுரியில் "நாகபஞ்சமி' மிகுந்த பக்திசிரத்தையுடன் கொண்டாடப்படுகிறது. நாக்பூர் மக்கள் உயிருள்ள நாகங்களையே வீட்டு வாசலுக்குக் கொண்டு வருவார்கள். பால், பழம், தேங்காய், துணி ஆகியவற்றை நாகத்துக்குக் காணிக்கையாக அளிப்பார்கள். ஆரத்தி எடுத்து வணங்குவர். வீட்டிலும் நாகர் விக்கிரகம் வைத்துப் பூஜை செய்வர்.

    நாகபஞ்சமி ஆவணி மாதம் பஞ்சமி திதியை ஒட்டி வரும். அன்றைய நாளை பெண்கள் முக்கிய விழாவாகக் கொண்டாடுவர். அன்று பகல் முழுவதும் விரதம் இருப்பர். ஜவ்வரிசியை வேக வைத்து, இந்துப்பு, தேங்காய், நிலக்கடலை ஆகியவற்றைக் கொண்டு கிச்சடி செய்து, அதை மட்டும் சாப்பிடுவர். பின்னர் இரவுப்பூஜையை முடிப்பர். கன்னிப் பெண்களும் மணமானவர்களும் நாகபூஜையில் கலந்து கொள்வர்.

    நாக்பூர் மக்கள் துர்க்கை கொலுவிருக்கும் குராடி அம்மன் கோயிலுக்குச் சென்று அன்னையை தரிசிப்பதையே முக்கிய கடமையாக கொண்டிருப்பர். வெள்ளி திருவாட்சி பூட்டி, அம்மனை பட்டாடையால் அலங்கரித்து பூஜிப்பர். துர்க்கை, போர்க்கோலம் பூண்டு கையில் சூலம், கத்தி, வில் ஆகியவற்றை ஏந்தி தீயனவற்றை அழிப்பவள்.

    கன்னிப்பெண்கள் திருமணம் நடக்கவும், மணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டியும் பிரார்த்தனை செய்வர். அன்னைக்கு காணிக்கையாக வளையல், மாலை, தேங்காய், கற்கண்டு ஆகியவற்றை கொண்டு செல்வர். இதில் தேங்காயைத்தவிர மற்றவற்றை துணியில் கட்டித் தொங்க விடுவர். இப்படி துணியில் கட்டி வைத்து வேண்டிக் கொள்வது சில நாள்களில் நடந்து விடுவதாகவும் அப்போது மீண்டும் போய் அன்னையை வழிபட்டு காணிக்கை செலுத்துவதாகவும் கூறுகிறார்கள்.

    நாகபஞ்சமியில் நாகதேவதையின் ஊர்வலம் நடைபெறும்போது இளம் பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் நின்றபடி பொரியை வாரியிறைத்து, நறுமணப் புகையைக்காட்டி, நாகதேவதையின் நல்லாசியை வேண்டுவர்.

    இவ்வாலயம், தினமும் காலையில் 11.00 மணி வரையிலும் மீண்டும் பிற்பகல் 4.00 மணிக்கு தரிசனத்திற்

    காகத் திறந்திருக்கும்.

    - டி.எம். இரத்தினவேல்

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai