Enable Javscript for better performance
நிகழ்வுகள்- Dinamani

சுடச்சுட

    

    ஆடிப்பூர சீமந்த பெருவிழா

    கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் முதல் தெருவில் உள்ள அருள்மிகு தேவிகருமாரியம்மன் ஆலயத்தில் ஆகஸ்டு 5 ஆம் தேதி ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல்கள் அலங்கரிக்கப்பட்டு நலங்கு வைபவமும், பக்தர்களுக்கு  சீமந்தச்சாப்பாடும் அளிக்கப்படுகின்றது. மழலைப்பேறு வேண்டும் பக்தர்கள் பங்கேற்கலாம்.

    தொடர்புக்கு: 98843 28777.

    பன்னிரு திருமுறைகள் ஓதும் வழிபாடு

    ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், தாண்டாம்பாளையம் அருள்மிகு காமாட்சியம்மன் உடனமர் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பன்னிரு திருமுறைகள் ஓதும் வழிபாடு நடைபெறுகின்றது.

    தொடர்புக்கு: 94422 80305.

    நாள்: 7.8.2016, நேரம்: 9.30 மணி.

    திருஆடிப்பூர உற்சவம்

    சென்னை மயிலாப்பூர் அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயிலில் திரு ஆடிப்பூர திருநாள் ஜுலை 27 இல் தொடங்கி நடைபெற்றுவருகின்றது. ஆகஸ்டு -5 ஆம் தேதி ஆடிப்பூரத்தன்று ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு விசேஷ திருமஞ்சனமும், திவ்ய ப்ரபந்த சேவை, சாற்றுமறை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

    தகவல்களுக்கு: 044-24985112.

    ஸ்ரீ வாராகி (ஆஷாட) நவராத்திரி பெருவிழா

    திருப்போரூர் செங்கற்பட்டு சாலையில் செம்பாக்கத்தில் உள்ளது ஸ்ரீ பீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம். இங்கு ஸ்ரீ மாதா லலிதாம்பிகை குழந்தையாக ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரியாகவும், குமரி பருவத்தில் ஸ்ரீ தருணீ திரிபுரசுந்தரியாகவும், விருத்த பருவத்தில் ஸ்ரீமத் ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரியாகவும் மூன்று வடிவில் அருள்புரிகின்றாள். ஸ்ரீ சக்ர ராஜ சபை தர்பார் என்று அழைக்கப்படும் மகிமை வாய்ந்த இந்த சந்நிதியில் ஸ்ரீ வாராகி (ஆஷாட) நவராத்திரி பெருவிழா ஆகஸ்டு-2, ஆடி அமாவாசை அன்று தொடங்கியது. ஆகஸ்டு-13 வரை நடைபெறும் இவ்விழாவில், ஸ்ரீ வாராகி உற்சவ அம்மனுக்கு கலசபூஜை, மூலமந்திர ஹோமம் அபிஷேகம், குங்குமார்ச்சனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆகஸ்டு-7 ஆம் தேதி சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    தொடர்புக்கு: 97899 21151.

    ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம புஷ்பாஞ்சலி

    திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் ஆகஸ்டு-12 ஆம் தேதி ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம புஷ்பாஞ்சலி நடைபெறுகின்றது. இதனையொட்டி அன்று காலை திரிபுரசுந்தரி அம்மனுக்கு 108 ஸ்ரீ சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டு, பட்டு புடவை சாற்றப்பட்டு சகஸ்ரகலசாபிஷேகமும், மாலை 51 வீணைகளில் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் இசைக்கப்பட்டு லட்சம் மலர்களால் புஷ்பாஞ்சலி நடைபெறுகின்றது. உலக நன்மைக்காக செய்யப்படும் இந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்கலாம்.

     தகவல்களுக்கு: 98941 09686.

    திருப்பணி

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுக்கா, அவலூர்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மன்னார்சாமி சமேத அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் ஆலயத்தின் நுழைவு வாயில் அமைக்கும் திருப்பணி (அவலூர் பேட்டை - திருவண்ணாமலை சாலையில் ஆலயத்திற்கு செல்லும் வழியில் முகப்பில்) நடைபெறுகின்றது. பக்தர்கள் இத்திருப்பணியில் பங்குகொண்டு நலம் பெறலாம். மேலும் மழை வளம், விவசாய உற்பத்தி பெருகவும் வேண்டி, ஸ்ரீ பச்சையம்மனுக்கு அபிஷேகமும் ஆராதனையும் பூ கரகம், அக்னி கரகம் எடுக்கும் விழாவும் நடைபெறும்.

    தொடர்புக்கு: 0416 2223361/ 2222261.

    நாள்: 12.8.2016.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai