Enable Javscript for better performance
யோகங்கள்- Dinamani

சுடச்சுட

    

    யோகம் என்பது அதிர்ஷ்டம் என்கிற வகையில் நடைமுறையில் கருதப்பட்டாலும் உண்மையிலேயே யோகம் என்கிற சொல்லுக்கு ஜோதிட சித்தாந்தப்படி, "சேர்க்கை' என்பதே பொருள். அந்த சேர்க்கையின் மூலம் அதிர்ஷ்டம் உண்டாகலாம். துரதிர்ஷ்டமும் உண்டாகலாம். ஒரு வீட்டின் அதிபதி நல்ல இடத்தில் அமர்ந்து அந்த இடம் அந்த கிரகத்துக்கு ஆட்சி (சொந்தவீடு), உச்ச வீடாகி, அஸ்தாங்கம் ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட வீட்டில் சுபக்கிரகம் இருக்க, அல்லது சுபக்கிரகத்தால் அந்த இடம் பார்க்கப்பட, இப்படி நல்ல நிலைமைகள் ஒன்று சேருமானால் நற்பலன்களைத் தருகின்ற யோகம் உண்டாகும்.  இவ்வகையில் சுபபலன்களைத் தரும் யோகங்கள் பன்னிரண்டாகும். இதற்கு எட்டாம் வீடு விதி விலக்காகும்.

    லக்னம் எனப்படுகிற முதல் வீட்டுக்கு: இது சாமர யோகமாகும். இதனால் வாழ்க்கையில் முதல் நிலை அமையப்பெற்று, வளர்பிறை சந்திரனைப் போல் நாளுக்கு நாள் அபிவிருத்தி அடையும். சுபிட்சமும் அடையப் பெறுவர். செல்வம் குவியும். ஆயுள் நீடிக்கும். புகழும் உன்னத ஸ்தானமும் அமையும்.

    இரண்டாம் வீட்டுக்கு: இது தேனு யோகமாகும். இதனால் நல்ல கல்விமானாகவும் செல்வனாகவும் நல்லதொரு குடும்பம் அமையப் பெற்றவராகவும் விளங்குவார்.

    மூன்றாம் வீட்டுக்கு: இது சௌரிய யோகமாகும். அதனால் அரசாங்க உத்தியோகச் சிறப்பும், பெயரும் புகழும் ஏற்படுவதுடன் இளைய சகோதரரின் முன்னேற்றம் உண்டாகும்.

    நான்காம் வீட்டுக்கு: இது ஜலதி யோகமாகும். வாழ்க்கை வசதிகள். வாழ்க்கை துணை நலம் சிறப்பு, அரசாங்கத்தில் சிறப்பாக பணிபுரியும் தகுதி, வாழ்க்கையில் ஒரு ஸ்திரத் தன்மை இவைகளுடன் சொத்துக்களின் சேர்மானமும் வாகன வசதியும், நிலபுலன்கள் சேர்க்கையும் அவற்றால் வருமானமும் உண்டாகும்.

    ஐந்தாம் வீட்டுக்கு: இது சத்ர யோகமாகும். அதனால் சந்தோஷமான குடும்பச் சூழ்நிலை, நல்ல வாழ்க்கைத்துணை, நன்மக்கள், ஜாதகருக்கு அறிவாற்றல், கல்வி மேம்பாடு, இனிமையாகப் பேசுகின்ற சுபாவம், பலராலும் போற்றப்படுகின்ற வாய்ப்பு, அமைச்சராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ, அரசாங்க ஆலோசகராகவோ ஆகும் வாய்ப்புண்டாகும். செல்வம், செல்வாக்கு எல்லாம் உண்டாகும்.

    ஆறாம் வீட்டுக்கு: இது அஸ்தர யோகமாகும். இதனால் சிறப்பான ஆற்றல் உண்டாகும். எதிரியை அடக்கக்கூடிய சக்தி உண்டாகும். சரீர வலிமை சாதனைபுரியும் சக்தியும் சரீரத்தில் வெற்றியின் தழும்புகளைப் பெறுகின்ற நிலையும் உண்டாகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai