Enable Javscript for better performance
கல்கருட சேவை!- Dinamani

சுடச்சுட

    
    11

    * நாச்சியார்கோயிலில் உள்ள கல்லாலான கருட வாகனத்தை, முதலில் சந்நிதியில் நான்கு பேர் தூக்குவார்கள். போகப்போக கருடன் கனத்துவிடுவதால் நான்கு எட்டாகி, எட்டிலிருந்து பதினாறாகி முடிவில் கோயில் வாசலில் "64' பேர் தூக்கி வருவார்கள். அப்போது கருடனுக்கு முகத்தில் வியர்வை துளிர்க்கும் என்கிறார்கள்.

    * பன்னிரண்டு வயதிலேயே சிவனருள் பெற்ற சண்டிகேஸ்வரருக்கு "சிறிய பெருந்தகையார்' எனச் செல்ல பெயர் உண்டு. இந்த பெயரைச் சூட்டியவர், பெரிய புராணம் எழுதிய சேக்கிழார். சிறியவர் ஆனாலும் செயலில் பெரியவர் என்பது இதன் பொருள்.

    * தர்மபுரியிலுள்ள "மல்லிகார்ஜுனர்' கோயிலில் உள்ள "நவரங்க' மண்டபத்தில் நூறு தூண்கள் உள்ளன. அதில் இரு தூண்களின் அடி, பூமியைத் தொடுவதில்லை. ஒரு குச்சியை நுழைத்து தூணின் மறுபக்கத்திலிருந்து எடுத்து இதை பரிசீலிக்க முடியும். ஒவ்வொரு  தூணும் இரண்டு டன் முதல் மூன்று டன் வரை எடை கொண்டது.

    - ஆர்.கே. லிங்கேசன்

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai