Enable Javscript for better performance
குறைவை நிறைவாக்கும் இயேசு- Dinamani

சுடச்சுட

    
    4

    இறைமகன் இயேசு தம்முடைய வாழ்வில் முதலில் செய்த அற்புதம், தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியதுதான். யோவான்: 2:1-9வரையுள்ள வசனங்களில் இதைக் காணலாம். இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் யோவான் இதை எழுதியுள்ளார். அந்த அற்புதத்தைப் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

    கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே கல்யாணம் நடந்தது. இயேசுவின் தாயும் அங்கே சென்றிருந்தார்கள். இயேசுவும் அவருடைய சீடரும் அந்தக் கல்யாணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சை ரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி, அவர்களுக்கு ""திராட்சை ரசம் இல்லை'' என்றார்.

    யூதர்களின் திருமணத்திலே எந்த ஒரு குறையும் இருக்கக்கூடாது. அவ்வாறு ஏதேனும் குறையிருந்தால், அந்த வீட்டாரை மற்றவர்கள் மிகவும் ஏளனமாக நினைப்பார்கள். மிகுந்த அவமானத்திற்குள்ளாவர்.

    இப்படிப்பட்ட வேளையிலே இந்த திருமண வீட்டிலே திராட்ச ரசம் குறைவுபட்டது. திருமண வீட்டார் என்னசெய்வதென்று தெரியாமல் நின்ற வேளையில், இறைமகன் இயேசுவின் தாயார் இயேசுவிடம் சொன்ன வார்த்தைதான் ""திராட்சை ரசம் இல்லை''.

    பின்னர் வேலைக்காரர்களைப் பார்த்து ""உங்களுக்கு அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யுங்கள்'' என கூறுகிறார்.

    இயேசு, காலியாகக் கிடக்கும் ஆறு கற்சாடிகளில் தண்ணீர் நிரப்பும்படி வேலையாளுக்கு கூறுகிறார். வேலையாட்கள் ஜாடிகளில் தண்ணீர் நிரப்பினர். அதை எடுத்து பரிமாறும்படி கூறினார். திராட்சை ரசமாக மாறிய தண்ணீரை பரிமாறினர். அதை ருசி பார்த்த மக்கள் மணவாளனை அழைத்து பாராட்டுகின்றனர். கலங்கிப்போயிருந்த திருமண வீட்டார் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர்.

    நம் இல்லத்திலே குறைவுகள் இருந்தாலும் அதை இயேசு நிறைவாக்குவார். அதற்கு நாம் செய்யவேண்டியது, நம் இதயத்தில் அவருக்கு இடம் கொடுக்க வேண்டும். இறைவன் தங்கும் ஆலயமாக நமது இதயத்தை மாற்றும் போது நமது குறைகள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கும். இல்லம் தேடி வருபவர் இயேசு; குறைகளை நிறைவாக்குபவர் இயேசு; அவர் நம்மிடம் வர விரும்புகின்றார். அவர் இருக்கும் இடத்தில் நிறைவு, ருசி, நல்ல மனம், திருப்தி, மகிழ்ச்சி இருக்கும்! நம் உள்ளத்தில் இயேசுவுக்கு இருக்க இடம் தந்து நிறைவாக வாழ்வோம்.

    - தே. பால் பிரேம் குமார்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai