Enable Javscript for better performance
நிகழ்வுகள்- Dinamani

சுடச்சுட

    

    கும்பாபிஷேகம்

    சென்னை, அம்பத்தூர், பானு நகரில் அமைந்துள்ள பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோயிலில் தவத்திரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தாஜி மகராஜ் தலைமையில் கும்பாபிஷேக பெருவிழா நடைபெறுகின்றது. 12.8.2016 - திருமூலர் ரத ஊர்வலம்; 13.8.2016 - புனித அன்னை ஸ்ரீ சாரதாதேவி தினம் கொண்டாடப்படுகின்றன. இதனையொட்டி, ஆன்மிகச் சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றன.

    நாள்: 14.8.2016.

    ************

    சென்னை,  திருமுல்லைவாயில், முல்லை நகரில் (தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம்) உள்ள அருள்மிகு ஸ்ரீ சர்வ ஐஸ்வர்ய விநாயகர், அருள்மிகு மங்களாம்பாள் சமேத ஸ்ரீ சொர்ண

    புரீஸ்வரர் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. பூர்வாங்க ஹோமங்கள், யாகசாலை பூஜைகள் ஆகஸ்டு- 27 இல் தொடங்குகின்றன.

    நாள்: 28.8.2016, நேரம்: காலை 6.45 - 7.15 மணி.

    திருப்பவித்திரத் திருவிழா

    திருமயிலை மாதவப்பெருமாள் திருக்கோயிலில் திருப்பவித்திரத் திருவிழா நடைபெறுகின்றது. இதனையொட்டி, சிறப்பு யாகங்கள், வேத பாராயணங்கள், நாலாயிரதிவ்ய பிரபந்த சேவை சாற்று மறைகளுடன் திருமஞ்சனம் செய்விக்கப்பட்டு திருப்பவித்திரம் சமர்ப்பித்தல் வைபவம் நடைபெறும்.

    நாள்: 13.8.2016 - 16.8.2016.

    ஆராதனை மகோத்சவம்

    கோயில் நகரம் என்ற பெருமையுடன் திகழும் சென்னை, நங்கநல்லூர் பகுதியில் விஷ்வரூப ஆஞ்சநேயர் ஆலயம் அருகில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனம் அமைந்துள்ளது. இந்த பிருந்தாவனத்தில் குரு பரம்பரை வரிசையில் அமைந்துள்ள மூன்று மிருத்திகா பிருந்தாவனங்களான ஸ்ரீ விஜயீந்திரர், ஸ்ரீ சுதீந்திரர், ஸ்ரீ ராகவேந்திரர் ஆகியோரை தரிசிக்கலாம். இங்கு ஸ்ரீ ராகவேந்திரசுவாமிகளின் 345 ஆவது ஆண்டு ஆராதனை விழா (பூர்வ, மத்ய, உத்தர) மூன்று நாள்களுக்கு நடைபெறுகின்றது.

    தொடர்புக்கு: 044 }22671575.

    நாள்: 19.8.2016- 21.8.2016.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai