Enable Javscript for better performance
யோகங்கள்(சென்ற வாரத் தொடர்ச்சி)- Dinamani

சுடச்சுட

    
    8

    ஏழாம் வீட்டுக்கு: இது காமயோகமாகும். இதனால் நல்ல மனைவியும் மக்களும் அமைவார்கள். குடும்பத்தில் நிலைத்த ஈடுபாடும் ஒருமித்த ஐக்கிய நிலையும் அமையும். இந்த ஜாதகர் தந்தையைக் காட்டிலும் மேலான நிலை அமையப் பெறுவதுடன் எல்லாவித சுபிட்சங்களையும் சந்தோஷத்தையும் அடைவார்.

    எட்டாம் வீட்டுக்கு: இது அசுர யோகமாகும். ஜாதகர் சுயநலவாதியாகவும் சங்கடங்களை அனுபவிக்கக் கூடியவராகவும் ஆவார்.

    ஒன்பதாம் வீட்டுக்கு: இது பாக்கிய யோகமாகும். இதனால் எல்லாவித நற்பாக்கியங்களும் உண்டாகும். அதிர்ஷ்டசாலியாகத் திகழ்வார். மதிப்புடையவராவார். செல்வம் சேர்ப்பார். வாழ்க்கையில் உன்னதமான ஸ்தானம் அமையப் பெறுவார். கடவுள் பக்தி, மனிதாபிமானம் எல்லாம் நிறையப் பெற்றிருப்பார்.

    பத்தாம் வீட்டுக்கு: இது கியாதி யோகமாகும். "கியாதி' என்றால் புகழ் என்று பொருள். செல்வம், செல்வாக்கு, வாழ்க்கையில் உயர்நிலை எல்லாவற்றையும் அடைவார். மேலும் நாடாளும் தகுதியும் நிர்வாகம் செய்யும் ஆற்றலும் ஏற்படும். மேலும் நல்ல கல்வி அறிவும் திறனும் அடைவார். புனிதப் பணிகளில் ஈடுபாடு கொள்வார். தெய்வீக மார்க்கங்களில் சித்தம் ஏற்படும். பக்தி மார்க்கங்களைப் பரப்பும் திறமை உண்டாகும்.

    பதினொன்றாம் வீட்டுக்கு: இது ஸுபாரிஜாத யோகமாகும். இதனால் ஜாதகர் நிறைய பொருள் ஆதாயம் பெறுவார். தலைவனாகவும் திகழ்வார். குடும்ப நலமும் சிறப்பாக அமையும்.

    பன்னிரண்டாம் வீட்டுக்கு: இது முசல யோகமாகும். ஜாதகர் கடுமையாக உழைத்து பொருள் திரட்டுவார். நல்ல காரியங்களுக்கும் செலவு செய்கிற மனப்பான்மை உண்டாகும். சுறுசுறுப்பாகச் செயல்படுகின்ற தகுதி உண்டாகும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai