Enable Javscript for better performance
சகல செல்வங்களையும் அருளும் ஸ்ரீ சங்கர நாராயணர்!- Dinamani

சுடச்சுட

    
    1

    "அரியும் சிவனும் ஒன்று!' என்பது ஆன்றோர் வாக்கு. சிவனும் விஷ்ணுவும் இணைந்து எழுந்தருளிய வடிவம், "ஸ்ரீ சங்கரநாராயணர்' திருக்கோலம்! திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு சங்கரநாராயணர், சென்னை, சாலிகிராமம், தேவராஜ் நகரிலும் அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை ஸ்ரீ சங்கர நாராயணராக எழுந்தருளி அருள்புரிகிறார்.

    ஸ்ரீசங்கர - நாராயணர் வடிவம் வந்ததெப்படி: ஒருசமயம், பார்வதி தேவி, சிவபெருமானிடம் சிவனும் விஷ்ணுவும் இணைந்த திருவுருவாக பெருமானைக் காண விரும்புவதாக தெரிவித்தார். சிவபெருமான் அம்மையிடம், "பொதிகை மலைச்சாரலில் புன்னை வனத்தில் தவம் செய்யும்படியாகவும் அச்சமயம் உமாதேவி விரும்பிய திருவுருவத்தை தரிசிக்கலாம்' என்றும் தெரிவித்தார். அதன்படி, ஆடித்திங்கள் உத்ராடம் நன்னாளில் அருள்தரும் கோமதி அம்மைக்கு ஸ்ரீசங்கர - நாராயணராக காட்சி கொடுத்தருளினார். அதையே "ஆடித்தபசு' ஆக, கொண்டாடுகிறோம். 

    மூலவர் ஸ்ரீ சங்கரநாராயணருடன் வள்ளி, தெய்வசேனா சமேத முருகப்பெருமான், ஸ்ரீ தர்மசாஸ்தா, தட்சிணாமூர்த்தி, துர்ரை, காலபைரவர், ஆஞ்சநேயர் என, அனைத்து பரிவாரத் தெய்வங்களும் அமைந்து விளங்குகின்றனர்.மேலும் மிக உயரமான கர்ப்பக்கிரக அமைப்பு, அதில் பிரதானமாக சிவவிங்க வடிவில் ஸ்ரீ சங்கரநாராயணர் காட்சி தருகிறார். அதற்கு பின்னால் நின்ற திருக்கோலத்தில் மிக உயர்ந்த திருமேனியுடன் வலப்பாகம் சங்கரரும் இடப்பாகம் நாராயணருமாக இணைந்து ஸ்ரீ சங்கரநாராயணர் அருள்பாலிக்கிறார். ஸ்ரீகோமதி அம்மன் தனி சந்நிதியில் அழகிய கோலத்தில் அருள்பாலிக்கிறார். 

    - ரவி

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai