Enable Javscript for better performance
நிகழ்வுகள்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீ கோகுலாஷ்டமி உற்சவம்
    சென்னை குரோம்பேட்டை, கிருஷ்ணாநகர், ஸ்ரீராமபக்த சமாஜத்தின் ஆதரவில் 37 ஆம் ஆண்டு ஸ்ரீ கோகுலாஷ்டமி உத்சவம் நடைபெறுகின்றது. விழா நாள்களில் ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ மூல பாராயணமும், உபன்யாஸம், இன்னிசை, நாம சங்கீர்த்தன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாகவத சம்பிரதாயப்படி ஸ்ரீருக்மணி கல்யாணத்துடன் நிறைவு பெறுகின்றது. 
    தொடர்பிற்கு : 98412 84637.
    நாள்: 24.8.2016 - 4.9.2016.
    மகாருத்ர பாராயணம்
    ஆதிசங்கர பகவத்பாதாள் அவதாரத் தலமாகக் கருதப்படும் காலடி தலத்தில் (கேரளாவில் உள்ளது) உள்ள சிருங்கேரி மடத்தில் சென்னை, மேற்கு மாம்பலத்தில் செயல்படும் ஸ்ரீ மகாருத்ர ஜப சமிதி சங்கத்தினர்கள் இருநூறுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பங்கேற்று மகாருத்ர பாராயண நிகழ்ச்சியை நடத்துகின்றனர். 
    தகவல்களுக்கு : 94444 66254.
    நாள் : 22.8.2016.     
    ஸ்ரீ பிரேமிக வரதன் பிரம்மோத்ஸவம்
    தாம்பரம் - ஸ்ரீபெரும்புதூர் மார்கத்தில் மலைப்பட்டு கிராமத்தில் உள்ளது மதுரபுரி ஆஸ்ரமம்.  இங்கு பூஜ்யஸ்ரீ மஹாரண்யம் முரளீதர ஸ்வாமிஜியின் பூஜா மூர்த்தியாக ஸ்ரீ மாதுரீஸகீ ஸமேத ஸ்ரீ பிரேமிக வரதன் எழுந்தருளியுள்ளார். இந்த சந்நிதியில் கிருஷ்ண ஜன்மாஷ்டமியை முன்னிட்டு 23 ஆவது வருட பிரம்மோத்ஸவம் நடைபெறுகின்றது.  உத்ஸவ நாட்களில் பல்லக்கு புறப்பாடு, ஸ்ரீமத் பாகவத பாராயணம், உபன்யாஸம், திவ்ய நாம சங்கீர்த்தன நிகழ்ச்சிகள் நடைபெறும்.  
    தொடர்பிற்கு : 044-24895875
    நாள்: 26.8.2016- 4.9.2016.
    மஹாகும்பாபிஷேகம்
    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள தலைக்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ பழனியாண்டவர் திருக்கோயிலில் மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. இங்கு தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகின்றது. இதே நாளில் இச்சிற்றூரில் உள்ள அருள்மிகு காளியம்மன் கோயில், ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயிலிகளிலும் கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.
    நாள்: 22.8.2016.
    மஹாசம்ப்ரோக்ஷணம்
    மதுரை, காமராஜர் சாலை, நூற்றாண்டுகால பிரசித்திப் பெற்ற ஸ்ரீ சீதா சமேத ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம், ஸ்ரீ ஆஞ்சநேய வால்கோட்டை கோபுர கோயிலில் மஹாசம்ப்ரோக்ஷணம் நடைபெறுகின்றது. பூர்வாங்க ஹோமங்கள், பூஜைகள் 17.8.2016 முதல் தொடங்குகின்றன. 
    தொடர்புக்கு: 94869 48332.
    நாள்: 21.8.2016, நேரம்: காலை 9.15 - 9.45 மணி.
    பிரதிஷ்டா தினம்
    சென்னை, பழைய பெருங்களத்தூர், இராயப்பா நகர், அருள்மிகு ஸ்ரீ வரதராஜபுரம் கிராமம், விஜயகணபதி ஆலய பிரதிஷ்டாதின வைபவம் (16.8.2016) நடைபெற்றது. மேலும் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெறும். 
    தொடர்புக்கு: 044 2243 4145. 
    நாள்: 5.9.2016.
    காவடி, பால்குடம், முளைப்பாரி விழா
    சின்னமனூர் நகரம், சீப்பாலக்கோட்டைரோடு, அகமுடையார் மக்கள் மன்றம் அருகில் ஸ்ரீ ஹரி மஹாகணபதி, அருள்மிகு ஸ்ரீ வன்னிவில்வ விருட்ஷ தீர்த்த ஸ்ரீ ராஜயோகநாயகி சமேத, ஸ்ரீ ராஜலிங்கேஸ்வரர் ஆலயம், ஸ்ரீ சடையாண்டி சித்தர், ஸ்ரீ கோபால் சித்தர், ஸ்ரீ தோழியப்ப சித்தர் பீடத்தில் சித்தர் பெருமக்களுக்கு 4 ஆம் ஆண்டு பால்குடம், காவடி, முளைப்பாரி எடுக்கும் விழா நடைபெறுகின்றது.
    தொடர்புக்கு: 98651 06535.
    நாள்: 22.8.2016.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai