Enable Javscript for better performance
வித்தியாசமான அர்த்தநாரீஸ்வரர்!- Dinamani

சுடச்சுட

    
    9

    கண்டியூருக்கு தென்கிழக்கில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது "திருவேதிக்குடி!' இங்கு அருள்பாலிக்கும் வேதபூரீசுவரர் ஆலயம் சப்தஸ்தான தலங்களுள் ஒன்றாகும். இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் வடிவம், வடப்புறம் உமையும் இடப்புறம் சிவனுமாக அமையப் பெற்றுள்ளது. இது ஒரு திருமணப் பிரார்த்தனைத் தலம் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பந்தர், அப்பர் பதிகம் பாடிய திருத்தலம் இது.
    தேனீக்கள் வடிவில் சித்தர்கள்
    திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்தில் "சித்தாய்மூர்' என்ற ஊர் இருக்கிறது. இதற்கு தேவாரத்தில் "திருசிற்றேமம்' என்று பெயர். இங்கே சுவாமி சந்நிதியில் தேன் கூடு இருக்கிறது. சித்தர்கள் தேனீக்களாக வந்து பூஜிப்பதாக ஐதீகம். இந்த தேனடைக்கும் தினந்தோறும் பூஜை நடக்கிறது. வைணவ திவ்ய தேசங்களில் திருக்கண்ண மங்கையில் தேனடையிருக்கிறது. இது ஏன்? என்பதற்கு தேவார - திவ்யபிரபந்தங்களிலும் விளக்கம் இருக்கிறது.
    - ஆர்.கே. லிங்கேசன்
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai