Enable Javscript for better performance
ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவன பிரவேசம்!- Dinamani

சுடச்சுட

    
    3

    ஒருமுறை, மகான் ஸ்ரீ ராகவேந்திரரைக் காண வந்தார்கள் மூன்று ஜோதிடர்கள்! அவர்களிடம் தமது ஆயுள் குறித்து கணக்கிட்டுச் சொல்லுமாறு கேட்டார்.

    திடர்கள் மகானின் ஜாதகத்தைக் கணித்த பின்பு, ""தங்களுக்கு நூறு வயது'' என்று சொன்னார் ஒருவர். மற்றவர், ""முந்நூறு வருடங்கள் வாழ்வீர்கள்'' என்றார். மூன்றாமவர், ""ஸ்வாமிகளே, தங்கள் ஆண்டு எழுநூறு'' என்றார். 

    ""மூன்று ஜோதிடர்களும் மூன்று விதமாகக் கூறுகிறார்களே'' என்று அருகிலிருந்த சீடர்கள் ஒன்றும் புரியாமல் குழப்பமடைந்தனர். சீடர்களின் மனநிலையை அறிந்த ஸ்ரீ ராகவேந்திரர், ""என் சரீரத்திற்கு வயது நூறு ஆண்டுகள்; என் நூல்கள் முந்நூறு ஆண்டுகளுக்குப்பிறகு பிரசுரமடைந்து புகழ்பெறும்; பிருந்தாவனத்தில் நான் 700 ஆண்டுகள் வாசம் செய்வேன்''என்றார். 

    ஒருசமயம், கர்நாடகாவில் "ஆதோனி' என்னும் ஊருக்கு வந்தபோது, அப்பகுதியை ஆட்சி செய்த ஹைதராபாத் நவாப், ஸ்ரீ ராகவேந்திரரை சோதிக்க எண்ணி மாமிசம் நிறைந்த கூடைமீது பட்டுத்துணியைப் போர்த்தி "மலர்க்கூடை' என்று சொல்லி அவரிடம் அளித்தான். புன்சிரிப்புடன் புனித நீரைத் தெளித்து அதனைப் பெற்றுக்கொண்டார் மகான். சீடர்களை அக்கூடையை திறக்கச் சொன்னார்.

    சீடர்கள் கூடையை திறந்தார்கள். கூடைக்குள் "சிவந்த மலர்கள்' நிறைந்திருந்தன. 

    இந்த அதிசயத்தைக் கண்ட நவாப், தான் செய்த செயலுக்கு வருந்தி, மன்னிப்பு கேட்டதுடன் மகான் தங்கியிருந்த அந்த "ஆதோனி' ஊரையே அளிப்பதாகச் சொன்னான். ஆனால் மகான் "தான் முகாமிட்டிருக்கும் "மாஞ்சாலம்' (மந்திராலயம்) என்னும் கிராமமே போதும்' என்றார். துங்கபத்ரா நதிக்கரையில் தாம் "பிருந்தாவனம்' மேற்கொள்ள விரும்பிய இடத்தை தேர்ந்தெடுத்தார். அதன்படி பிருந்தாவனமும் அமைந்தது. 

    கி.பி. 1671 ஆம் ஆண்டு, ஆவணி மாதம் கிருஷ்ணபட்சம், துவிதியை திதியுடன் கூடிய வியாழக்கிழமை அன்று தம் சீடர்களை அழைத்த மகான், "தாம் பிருந்தாவனப் பிரவேசம் செய்யும் நேரம் வந்துவிட்டது' என்றருளினார்.
    சீடர்களும் பக்தர்களும் பொதுமக்களும் சூழ்ந்திருக்க, பிருந்தாவனப் பிரவேசம் செய்தார் மகான் ஸ்ரீ ராகவேந்திரர். இன்றும் பிருந்தாவனத்தில் வாசம் செய்து கொண்டு, தம்மை நாடி வருபவர்களுக்கும் தம்மை மனதளவில் நினைப்பவர்களுக்கும் மானசீகமாக அருளாசி வழங்கி அவர்களது விருப்பங்களை நிறைவேற்றுகிறார். 

    மகான் ஜீவசமாதி அடைந்த நாள் வியாழக்கிழமை என்பதால் அன்று பூஜை அறையில் வைத்துள்ள அவரது திருவுருவப் படத்தின் முன் சிறப்பு வழிபாடுகள் செய்ய சகல பாக்கியங்களும் கிட்டும்.

    - டி.ஆர். பரிமளரங்கன்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai