Enable Javscript for better performance
கல்கூரையில் 12 ராசிகள்- Dinamani

சுடச்சுட

    
    9

    புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயிலில் சிவபெருமான் தெற்கு நோக்கி காட்சி தருவது வித்தியாசமான அமைப்பாகும். மேலும் இவ்வாலயத்தின் கல் கூரையில் 12 ராசிகள் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. அதன் நடுவில் தாமரையும் சிட்டுக்குருவியும் செதுக்கப்பட்டுள்ளதுடன் சுற்றிலும் சங்கிலி வளையம் போன்றும் அமைக்கப்பட்டுள்ளது.பிரதான கிரகங்களான, சனி, குரு மற்றும் ராகு -கேது பெயர்ச்சியின்போது இக்கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட, கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    மேலும், இவ்வாலயத்தில் நவக்கிரகங்களுக்கென தனி சந்நிதி கிடையாது. அதற்குபதிலாக, நான்கு தூண்களில் முறையே முதல் தூணில் உஷா- பிரதியுஷா சமேத சூரியன், புதன் ஆகியோரும் இரண்டாவது தூணில் சனி, குரு, சுக்கிரன், செவ்வாய் ஆகியோரும் மூன்றாவது தூணில் ராகு- கேதுவும்  நான்காவது தூணில் சந்திரனும் உள்ளனர். 27 நட்சத்திரங்களுக்கான சிற்பங்களும் இவ்வாலயத்தில் உள்ளன. மொத்தத்தில் 9 கிரகங்கள், 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் ஆகிய அனைத்தையும் ஒருசேர, ஒரே நேரத்தில் ஆவுடையார் கோயிலில் தரிசிக்கலாம். 

    - துரை. இராமகிருஷ்ணன் 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai